அம்மன் திருவிழாவிற்கு வல்வை வரும் மக்களுக்கு காலநிலை மாற்ற எச்சரிக்கை

0
770 views

இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பமயமான காலநிலை மே மாதம் மத்திய பகுதிவரை நிலவும் என காலநிலைய அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
பருவப் பெயர்ச்சி காலநிலை மாற்றத்தினால் வெப்ப நிலை அதிகரித்துள்ளது.
இந்த வெப்பநிலைய அதிகரிப்புடன் இலங்கையின் பல மாவட்டங்களின் வெப்ப நிலை ஐந்து பாகை செல்சியஸினால் அதிகரித்துள்ளதாக காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனவே வெப்பநிலை அதிகரிப்பினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் அதற்கு ஏற்றவகையிலான ஆடைகளை பயன்படுத்த முயற்சிக்க வேண்டும் என பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here