கொழும்பு தியகம மகிந்த ராஜபக்ஸ விளையாட்டரங்கில் இடம்பெற்று வரும் தேசிய கனிஸ்ட மெய்வன்மைப்போட்டியில் யாழ் மாவட்டத்திலிருந்து பங்குபற்றிய இரு வீராங்கனைகள் சம்மட்டி எறிதலில் பதக்கம் வென்றுள்ளனர் .
நேற்று நடைபெற்ற 20 வயது பெண்களுக்கான சம்மட்டி எறிதலில் யாழ் மாவட்டத்திலிருந்து பங்குபற்றிய ஜே.சுகன்ஜா 19.44 மீற்றர் தூரம் எறிந்து இரண்டாமிடத்துப்பெற்று வெள்ளிப்பதக்கத்தையும் ஜே.மேரி லக்ஸிகா 18.69 மீற்றர் துரம் எறிந்து மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.
அத்துடன் பி.மேரி ரதீனா 15.74 மீற்றர் தூரம் எறிந்து 5ஆம் இடத்தையும் பெற்றார்