சிவன் அறக்கட்டளை கல்வி மேம்பாட்டுப் பேரவையால் கல்வி மற்றும் விளையாட்டுத்துறைகளால் சாதனை படைத்த நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் நேற்று பதக்கம் அணிவித்து பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.சிவன் அறக்கட்டளை நிறுவனத்தின் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்வும் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று நெல்லியடி மத்திய கல்லூரியில் இடம்பெற்றன.
பேரவையின் தலைவர் ஓய்வு நிலை மாகாணக் கல்விப்பணிப்பாளர் வ.செல்வராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமராட்சி கல்வி வலயத்தைச்சேர்ந்த G.C.E உயர்தரப் பரீட்சுயில் தமிழ் ஆங்கில மொழி மூலங்களில் 3 A பெற்ற மாணவர்கள் G.C.E சாதாரண தரப்பரீட்சையிலா 9 A பெற்ற மாணவர்கள் ஒவ்வொரு பாடசாலைகளிலும் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவர்கள் மற்றும் தேசிய மட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் உட்டட 100 மேற்பட்டவர்கள் நிகழ்வில் கலந்துகொண்ட விருந்திர்களால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக குடிசாரா பொறியியல்துறைத்தலைவர் ச.சு சிவகுமார் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினரான எம் கே சிவாஜிலிங்கம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் வடமராட்சி வலயக் கல்விப்பணிப்பாளர் சி.புஸ்பலிங்கம் தென்மராட்சி வலயக்கல்விப்பணிப்பாளர்.சு.கிருஸ்ணகுமார் மற்றும் யாழ் வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.தெய்வேந்திரராசா உட்பட பல கல்வியியலாளர்கள் கலந்து கொண்டனர்