இடையில் நிறுத்தப்பட்ட வல்வை முத்துமாரி அம்மன் பொதுக்கூட்டம்

0
809 views

இன்று 09.04.2017 காலை வழமை போல் திருவிழாவிற்கு முன்னதாக வல்வை முத்துமாரி அம்மன் பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. திருவிழாவை சிறப்பான முறையில் கொண்டாடுவது தொடர்பாக கதைத்து முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன் பின்பு கடந்த நிர்வாகத்தின் கணக்குகள் ஆராயப்பட்டு ஒப்படைக்கப்படாத கணக்குகள 14 நாட்களுக்குள் ஒப்படைக்கப்படாவிடின் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து திருமண மண்டப கடன் சம்பந்தமாக கதைக்கப்பட்ட போது பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூறி குழப்பமான நிலை உருவாகியதால் அத்துடன் பொதுக்கூட்டம் இடைநிறுத்தப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here