மாகாண மட்டப் பூப்பந்தில் யாழ் மாவட்ட ஆண்கள் அணி3:1என்ற செற்கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது தடையாகவும் சம்பியனாகியது. வடக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களத்தால் நடத்தப்படும் மாகாண மட்ட பூப்பந்தாட்டப் போட்டிகள் நேற்று மன்னார் பொது விளையாட்டரங்கில் இடம்பெற்றன.
இதில் ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் யாழ் மாவட்ட அணியும் வவுனியா மாவட்ட அணியும் பலப்பரீட்சை நடத்தின . 3 தனிநபர் ஆட்டங்களையும் 2 தனிநபர் ஆட்டங்களையும் கொண்ட இச்சுற்றுப் போட்டியில் யாழ் மாவட்ட அணிசார்பாக களமிறங்கிய றெமின்சன் வவுனியா மாவட்டத்தைச்சேர்ந்த துசாந்தை21:16 21:16 என்ற புள்ளிகளைப்பெற்று 2:0 நேர் செற் கணக்கிலும் கனிஸ்ரன் 21:19 21:17 என சுலக்சனை 2:0 என்ற நேர் செற்றிலும் வெற்றி பெற 2:0 என முன்னிலை பெற்றது யாழ் மாவட்ட அணி.அடுத்த தனி நபர் ஆட்டத்தையும் வென்றால் கிண்ணம் யாழ் மாவட்ட அணியின் வசமாகும் நிலையில் மூன்றாவது போட்டியில் அவ் அணிசார்பாக துசானந்தன் களமிறங்க அவரை வவுனிவைச் சேர்ந்த பிரணவன் எதிர்கொண்டார் .இதில் பிரணவன் 21:19 21:17 என்று தமது அணிக்கான முதல் வெற்றியைப் பதிவு செய்ய ஆட்டம் இரட்டையர் ஆட்டத்தின் மூலம் வெற்றியாளரைத் தீர்மானக்க வேண்டிய நிலை ஏற்பட்டது இந்நிலையில் யாழ் மாவட்ட அணிசார்பாக றெமின்சன் துசானந்தன் இணையும் வவுனியா அணிசார்பாக ஜோன்சன் துசானந் இணையும் களம்புகுதந்தன. இதில் 21:15 21 17 என்ற புள்ளிகள் அடிப்படையில் றெமின்சன் இணைவெற்றி பெற3:1 என்று யாழ்மாவட்ட அணி சம்பியனாகி மூன்று வருடங்கள் தொடர்சம்பியன என்ற நாமத்தை தமதாக்கியது..இப்பிரிவில் மூன்றாமிடத்தை மன்னார் மாவட்ட அணி பெற்றது.