மாகாண மட்டப் பூப்பந்தில் யாழ் மாவட்ட பெண்கள் அணி3:0 என்ற செற்கணக்கில் வெற்றி பெற்று மீண்டும் சம்பியனாகி அசைக்க முடியாத அணி என்பதனை நிரூபித்துள்ளது. வடக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களத்தால் நடத்தப்படும் மாகாண மட்ட பூப்பந்தாட்டப் போட்டிகள் நேற்று மன்னார் பொது விளையாட்டரங்கில் இடம்பெற்றன.
இதில் பெண்களுக்கான இறுதியாட்டத்தில் யாழ் மாவட்ட மகளிர் அணியும் மன்னார் மாவட்ட மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்தின . 3 தனிநபர் ஆட்டங்களையும் 2 தனிநபர் ஆட்டங்களையும் கொண்ட இச்சுற்றுப் போட்டியில் யாழ் மாவடாட அணிசார்பாக களமிறங்கிய பதுமிதா மன்னார் மாவட்ட அணிசார்பாக களமிறங்கிய அபஷாவை 21:10 21 9 என்ற புள்ளிகளைப்பெற்றும் யாழ்மாவட்ட அணிசார்பாக இரண்டாவதாக களமிறங்கிய கம்சாயினி மன்னார் வீராங்கனை மிலிங்டாவை 21:9 21:7 என்றபுள்ளிகளைப்பெற்று 2:0 நேர் செற்கணக்கில் வெற்றிபெற்று அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.தொடர்ந்து இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் யாழ் மாவட்ட அணி சார்பாக களமிறங்கிய கேசாயினி மன்னார் வீராங்கனை நடாவை 21:14 17:21 21:15 என 2:1 என்ற செற்கணக்கில் வெற்றிபெற யாழ் மாவட்ட அணி சம்பியனாகியது.இப்பிரிவில் மூன்றாமிடத்தை வவுனியா மாவட்ட அணி பெற்றது.