வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டுப்போட்டியின் ஓர் அங்கமான ஆண்களுக்கான உதைபந்தாட்டப்போட்டியின் இறுதியாட்டமானது நேற்றைய தினம்(05/04/2017) இடம்பெற்றது.அந்தவகையில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் நேதாஜி அணியை எதிர்த்து இளங்கதிர் அணியானது மோதியது. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ்வாட்டத்தில் இரு அணிகளுமே தமக்கு கிடைத்த கோல் வாய்ப்புகளை தவறவிட்டனர். எனவே ஆட்டம் முடியும் வரை இரு அணியினரும் எவ்வித கோல்களையும் போடவில்லை.எனவே வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடுவரால் வழங்கப்பட்ட தண்ட உதையில் 3-2 என்ற கோல்கணக்கில் நேதாஜி அணி வெற்றி பெற்று சம்பியனாகியது.வெற்றி பெற்ற நேதாஜி அணியினருக்கு எமது வாழ்த்துக்கள்.
அப்போட்டிக்கு முன்னதாக இடம்பெற இருந்த 3 ஆம் இடத்திற்கான ஆட்டத்தில் ரேவடி அணியினை எதிர்த்து றெயின்போ அணி மோத இருந்தது. அப்போட்டிக்கு றெயின்போ அணி வருகை தராத காரணத்தால் ரேவடி அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.