இலங்கை தேசிய கால்ப்பந்தாட்ட அணிக்கு 23 வயதுக்குட்பட்ட வீரர்களை தெரிவு செய்வதற்கான கால்ப்பந்தாட்டப் பயிற்சி முகாம் நேற்று முதல் இமையாணன் மத்திய விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
23 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஏ.எவ் சி கிண்ணத்துக்ஙான தகுதி காண் சுற்று எதிர்வரும் ஜூலை மாதம் சீனாவில் இடம்பெறவுள்ளது.அப்போட்டியில் பங்குபற்றும் தேசிய அணிக்கு வீரர்களை தெரிவு செய்வதற்கான பயிற்சி முகாம் அனைத்துப் பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றது..
அதில் வடமராட்சி பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கிற்குட்பட்ட வீரர்களைத் தெரிவு செய்வதற்கான நிகழ்வு நேற்று ஆரம்பமானது.
இலங்கை கால்பாபந்தாட்ட அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் டட்லி செயின்வேலட்.கோல் கீப்பர் பியிற்றுவிப்பாளர் மைந்த கலகெதர உதவிப்பயிற்றுவிப்பாளர் இரஜமணி தேவசகாஜம் மற்றும் கால்ப்பந்தாட்ட அணியின் உடற்கூற்றியல் நிபுணர் சஞ்சீவ் டி சில்வா ஆகியோர் இப்பயிற்சி முகாமை நடத்தினர்.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட கால்ப்பந்தாட்டப் பயிற்றுனர் பா முகுந்தன் கிளிநொச்சி மாவட்ட பயிற்றுனர் எல்.அனுராகாந்தன் வடமராட்சி கால்ப்பந்தாட்டச் சங்க தலைவர் டி.எம் வேதாபரணம் பருத்தித்துறை கால்ப்பந்தாட்ட சங்ங செயலாளர் அ.அருளானந்தசோதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.