டெங்கு மற்றும் எச்.வன்.என்.வன் காய்ச்சல் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் வழமைக்குமாறான காலநிலை குறித்தநிலைமைக்கு காரணம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடுபூராகவும் சுமார் 27,898பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களுள் 50 வீதமானவர்கள் மேல்மாகணத்தில் பதிவாகியுள்ளதாக டெங்கு தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரிமற்றும் கேகாலை ஆகிய 11 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் உள்ளதாகவும் டெங்கு தடுப்புபிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.