வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான கடற்கரை கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பெண்கள் பிரிவில் உடுப்பிட்டி பெண்கள் கல்லூரி இவ்வருடத்திற்கான சம்பியனாகியது.
இப்போட்டியின் இறுதியாட்டம் நேற்று வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்றது.இவ்விறுதியாட்டத்தில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியும் பருத்தித்துறை சென்தோமஸ் பெண்கள் பாடசாலையும் மோதின 3 செற்களைக்கொண்ட இவ்வாட்டத்தில் 22:20 21:16 என்ற புள்ளிகளைப் பெற்று 2;0 என்ற நேர் செற்கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது உடுப்பிட்டி மகளிர் கல்லூரி . இப்பிரிவில் மூன்றாமிடத்தை தொண்டைமாறு வீரகத்தி மகா வித்தியாலம் பெற்றது.