வல்வையின் கால்ப்பந்தாட்டத் தொடரில் நவிண்டில் கலைமதி விளையாட்டுக்கழகம் மற்றும் இமையாணன் மத்திய விளையாட்டுக்கழகம் என்பன வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்களுக்கு முன்னேறியுள்ளன.
பருத்தித்துறை கால்ப்பந்தாட்டச்சங்கத்தின் அனுமதியுடன் வல்வை விளையாட்டுக்கழகம் நடத்தும் கால்ப்பந்தாட்டத்தொடர் வல்வை றெயின்போ விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
அதில் நேற்று இடம்பெற்ற ஆட்டத்தில் நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகமும் கலட்டி ஐக்கிய விளையாட்டுக்கழகமும் மோதின. இதில் அபாரமாக
விளையாடியகலைமதி விளையாட்டுக்கழகம் வினித்தின் ஹற்றிக் கோலின் உதவியுடன் 6:1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள நுழைந்தது கலைமதி விளையாட்டுக்கழகம். அவ்வணி சார்பாக வினித் 3 கோல்களையும் ஜெனதன் 2 கோல்களையும் சிவசுதன் ஒருகோலையும் கலட்டி சார்பாக நிஷாந்தன் ஒருகோலையும் போட்டனர்.
அடுத்து இடம்பெற்ற ஆட்டத்தில் இமையாணன் மத்திய விளையாட்டுக்கழகமும் அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக;கழகமும் பலப்பரீட்சை நடத்தின.விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ்வாட்டத்தில் 11 ஆவது ஆட்டத்தில் மத்தியின் சார்பாக சாரு முதல் கோலைப்பதிவு செய்தார். தொடர்ந்து 20 ஆவது நிமிடத்தில் மணிதாஸ் ஒரு கோல் போட 2:0 என்ற இமையாணன் மத்திய அணியின் ஆதிக்கத்துடன் முதல்பாதியாட்டம் நிறைவுக்கு வந்தது.
இரண்டாம் பாதியில் ஆட்ட வியூகத்தை மாற்றி விளையாடிய அல்வாய் நண்பர்கள் அணிஅஜித்ராஜ் விஜிதரன் ஆகியோரின் உதவியுடன் அடுத்தடுத்து இரண்டு கோலைப்போட ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது.இந்நிலையில் இறுதி நிமிடத்தில் இமையாணன் மத்திக்கு கிடைத்த நேர் உதையை சுலக்க்ஷன் உதைக்க அதை சாரு தலையால் முட்டி கோல்க்கம்பங்களுக்குள் புகுத்த 3:2 என்ற கோல் கணக்கில் வென்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.