டென்மார்க் வல்வை ஒன்றியத்தின் குளிர்கால ஒன்றுகூடல் 04.03.2017 சனிக்கிழமை பிலுண்ட் நகரில் மங்கல விளக்கேற்றல், அகவணக்கத்துடன் ஆரம்பித்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இவ் விழாவில் சிறுவர்களின் நடனம், பாடல் மற்றும் சிறுவர், பெரியோர்களுக்கான விளையாட்டுகளும் நடைபெற்றது.
விழாவில் சிறப்பாக பல்கலைக்கழகம் முடித்து பட்டம் பெற்ற இளையோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இளையோர்களின் தலைமையில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.