ஆண்களுக்குரிய பூப்பந்தாட்டப் போட்டியில் வல்வை அணியை வெற்றி பெற்று சம்பியன் ஆகியது பருத்தித்துறை ஐக்கியம்

0
531 views

பருத்தித்துறை பிரதேச செயலகஅணிகளுக்கிடையிலான ஆண்களுக்குரிய பூப்பந்தாட்டப் போட்டியில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகம் சம்பியன் பட்டத்தை தமதாக்கியது.
குறித்த போட்டியின் இறுதியாட்டம் நேற்று முன்தினம் வல்வை சிவகுரு வித்தியாலய ஆடுகளத்தில் இடம்பெற்றன. போட்டி வல்வை சிவகுரு மகாவித்தியாலத்தில் பி.ப3.30க்கு ஆரம்பமானது. 8 விளையாட்டுக்கழக அணிகள் பங்குபற்றின. இதில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழக அணி சம்பியன் ஆகியது.
இவ்விறுதியாட்டத்திலும் பருத்தித்துறை ஐக்கியமும் வல்வை விளையாட்டுக்கழகமும் மோதின. இரண்டு தனிநபர் ஒரு இரட்டையர் ஆட்டங்களைக்கொண்ட இத்தொடரில் இரு தனிநபர் ஆட்டங்களையும் கைப்பற்றிய பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகம் 2:0 என்ற நேர் சுற்றில் வெற்றிபெற்று சம்பியனாகியது பருத்தித்துறை ஐக்கிய அணி.
சொந்த மண்ணில் இரசிகர்கள் பலத்துடன் மோதிய வல்வை அணியை , தனிஆட்டம் இரண்டிலும் (21:15, 21:13) (21:17,21:16) என ஐக்கியம் வெற்றி பெற்று சம்பியன் ஆகியது.வல்வை அணி இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here