கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் வழங்கிய வாழ்வாதார உதவி ஆட்டோ
கடந்த 17.02.2017 வெள்ளிக்கிழமையன்று மாலை வல்வையில் வாழும் முன்னாள் போராளி அஜித் கணேசலிங்கம் அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக ஆட்டோ ஒன்று வழங்கப்படும் நிகழ்வு வல்வை முத்துமாரி அம்மன் கோயிலின் முன்றலில் சிறப்போடு நடைபெற்றது.
போர் காரணமாக 2008ம் ஆண்டு மன்னாரில் வைத்து ஒரு காலை இழந்த முன்னாள் போராளியான வல்வையில் வாழும் அஜித் என்பவர் வாழ்வாதார உதவியாக தனக்கு ஓர் ஆட்டோவை வழங்க வேண்டுமென எழுத்து மூலமாக வழங்கிய விண்ணப்பத்திற்கு அமைவாக அவருக்கு ஆட்டோ ஒன்றை வழங்க கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் முன்வந்தது.
இதன் பொருட்டு எடுக்கப்பட்ட கனடாவில் இருந்து எடுக்கப்பட்ட முயற்சிகளை அறிந்து அதற்கு உதவ முன்வந்தவர் தற்போது கனடாவில் வாழும் திரு. வேலுப்பிள்ளை யோகச்சந்திரன் என்பவராகும்.
இவர் வீரச்சாவடைந்த போராளியான தனது சகோதரர் வேலுப்பிள்ளை உதயகுமார் ( மேஜர் விவேக் விடுதலை ) நினைவாக அஜித் கேட்டுள்ள ஆட்டோவை வழங்க சம்மதமென ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசனிடம் தெரிவித்திருந்தார்.
மேலும் 2008ம் ஆண்டு மன்னாரில் இடம் பெற்ற போரில் காயமடைந்து ஒரு காலை இழந்த முன்னாள் போராளியான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அஜித் கணேசலிங்கத்தின் எதிர்கால வாழ்விற்கு இது மிகவும் அவசியம் என்று வல்வையில் இருந்து திரு. பொட்டுக்கட்டி அவர்கள்இ மு. தங்கவேல் அவர்கள் விண்ணப்பத்தின் உண்மைத்தன்மையை ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசனிடம் ஊர்ஜிதப்படுத்தியிருந்தார்கள்.
அதற்கமைவாக விண்ணப்பம் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு பின் இந்த ஆட்டோவை வழங்க முடிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு அமைவாக வல்வையில் உள்ள ரியூப் தமிழ் உறுப்பினர்கள் ஆடடோவை வாங்கி வெற்றிகரமாக கையளித்தார்கள்..
முத்துமாரி அம்மனை கற்பூரம் கொழுத்தி தேங்காய் உடைத்து வணங்கிஇ இன்றிலிருந்து இவர் வாழ்வில் ஒரு புது வழி பிறக்க வேண்டுமென வாழ்த்தி இந்த வாகனம் வழங்கப்பட்டது.
மேலும் ஒரு காலுடன் வாழ்வதால் அதற்கு ஏற்ப இயக்கக் கூடியவிதமாக இந்த வாகனத்தின் செயற்பாட்டுத்தன்மை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
வாகனத்தை பெற்றுக்கொண்ட முன்னாள் போராளியான அஜித் ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசனுக்கு நன்றி தெரிவித்ததுடன் இந்தத் தொழிலை தான் தொடர்ந்தும் முன்னெடுப்பேன் என்று வாக்குறுதியும் வழங்கினார்.
அதேவேளை ஆட்டோவை வழங்குவதற்கான பொருளாதார உதவியை வழங்கியவரான திரு. வேலுப்பிள்ளை யோகச்சந்திரன் கனடா ரொரன்ரோ புளுசின் முக்கிய நிர்வாகிய இருந்தவராகும்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசனின் பணிகள் தொடர்கின்றன..