வல்வெட்டித்துறையில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இடம்பெறும் வினோத (வி)சித்திரமான பட்டப் போட்டி நடைபெறும் இடமான வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையை J/389 கிராம சேவகர் பிரிவு மக்களால் நேற்றை தினம் 10.01.2015 (திங்கட்கிழமை) அழகுபடுத்தும் பணி ஆரம்பமாகியுள்ளது. இப்போட்டியில் கடந்த வருடம் 83 பட்டங்கள் வானில் பறக்க விடப்பட்டன. இவ் வருடம் இதற்கும் அதிகமான பட்டங்கள் பறக்கவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப் பட்டப் போட்டியில் கல்வி,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரம், வடக்குமாகாணம் திரு.தம்பிராசா குருகுலராசா அவர்கள் பிரதம விருந்தினராகவும் திரு.M.K சிவாஜிலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கௌரவ விருந்தினர்களாக திரு.T.S.மீடின், திரு.சி.தவனேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். அத்துடன் இணைய வசதிகளுடன் கூடிய நூலகமும் திறந்து வைக்கப்படவுள்ளது. மற்றும் 2014 ஆம் ஆண்டுக்கான கல்விசாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.