தற்போது வல்வையில் வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளியான கவிஞர் கம்பிகளின் மொழி பிறேம் அவர்கள் எழுதிய இரண்டு நூல்கள் தமிழகத்தில் வெளியீடு செய்து வைக்கப்படவுள்ளன.
எதிர்வரும் சனிக்கிழமை 11.02.2017 அன்று சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் இந்த நிகழ்வு மாலை 17.00 மணிக்கு இடம் பெறுகிறது.
காய்ந்து போகாத இரத்தக்கறை என்ற நாவலும் மறந்திடுமோ மனதைவிட்டு என்ற கவிதைத் தொகுப்பும் அன்றய தினம் அறிமுகம் செய்யப்படுகின்றன.
விழாத் தலைமை கவிஞர் திரு. வாலிதாசன்
வரவேற்புரை : செல்வி பிரியா ( குறும்பட இயக்குநர் )
வெளியிடுபவர் : சமூகப்பற்றாளர் கவிஞர் திரு. ஞானசித்தன்
பெறுபவர் : திரு.சி.பழனிச்சாமி நிறுவனர் ஆதிவாசி பவுண்டேசன்
நூல் திறனாய்வு : திரு.எம். அருள்பிரகாஷ் ஆவணப்பட இயக்குநர்
ஏற்புரை : கவிஞர் கம்பிகளின் மொழி பிறேம்
நிகழ்ச்சித்தொகுப்பு : செல்வி க.வேம்பு ( பேச்சாளர் )
சென்ற ஆண்டு கவிஞரின் மறந்திடுமோ மனதைவிட்டு என்ற கவிதை நூல் வல்வையில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது தெரிந்ததே.
போரினால் பாதிக்கப்பட்டு..
பட்டினி கிடந்து பசியால் மெலிந்து..
பாழ்பட நேர்ந்தாலும்..
எந்தன் கட்டுடல் மெலிந்து கைகால்
இழந்தாலும் எனை
தொட்டு வளர்த்த தமிழ் அன்னை
புகழ் மறப்பேனோ என்று
கவிஞர் காசியானந்தனின் வரிகளை இவருக்காக மாற்றிப் போட வேண்டியுள்ளது.
போராளியாக இருந்து ஒரு கைஇ ஒரு காலை இழந்துஇ பூசா முகாமில் கிடந்து சிறைக்கம்பிகளோடு வருந்தி தனது புனை பெயரையே கம்பிகளின் மொழி என்று சூட்டிஇ ஏழ்மையிலும் கவித்தாகம் கொண்டு திரியும் அரியதோர் கலைஞர் இவராகும்.
சொந்த நாட்டிலேயே நூலை வெளியிட தயங்கும் இன்றைய சூழலில் இன்னொரு நாட்டை நம்பி அவர் புறப்படும் பயணம் பாராட்டத்தக்கது.
அதிகார மோதலில் பொறிகக்கும் சென்னை வீதிகளில் அதுவும் எழும்பூர் சாலையில் நடைபெறும் இந்த வெளியீடு மறந்திடுமோ மனதைவிட்டு என்று சொல்லும்படியாக உணர்வு பூர்வமாக நடைபெறவுள்ளது.
சிறந்த தன்னம்பிக்கை மனிதராக வலம் வரும் கம்பிகளின் மொழி பிறேம் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகிறார்.
இவருடைய எழுத்தில் பல நூல்கள் உருவாகி வருகின்றனஇ டென்மார்க்கில் தயாரான உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் பிரதான வெளியீட்டாளரும் இவரே.
திரைப்படத்தை டென்மார்க் தர்மா தர்மகுலசிங்கம் இவரிடம் கையளித்த புகைப்படமும் இத்துடன் இடம் பெறுகிறது.
சமீபத்தில் வல்வையில் இடம் பெற்ற டென்மார்க் எழுத்தாளர் கி.செ.துரையின் மனப்பட மனிதர்கள் என்ற நூலையும் வெளியிட்டு வைத்தவர் இவரே.