கொழும்பு மற்றும் பஹ்ரைனிற்கு (Bahrain) இடையில் குல்ப் எயார் (Gulf air) நிறுவனமானது தனது நேரடி விமான சேவையினை ஆரம்பித்து வைத்துள்ளது.
இலங்கையில் காணப்படும் முக்கியமான சுற்றுலாத்தளங்களில் கொழும்பு நகரும் ஒன்றாகும், அந்தவகையில் ஒருவாரத்திற்கு ஐந்து தடவைகள் இந்த நேரடிச் சேவை பஹ்ரைன் – கொழும்புக்கிடையில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மிகப்பெரிய விமானச்சேவை நிறுவனங்களில் குல்ப் எயார் விமான சேவையும் உலகில் பத்திற்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் சேவையினை தொடர்ந்து வருகின்றது.
தற்போது மூன்று கண்டங்களுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ள குறித்த விமான நிறுவனமானது 24 நாடுகளில் உள்ள 41 நகரங்களுக்கு தனது சேவையை வழங்கி வருகின்றது .
இவ்வாறு கொழும்பிற்கு வந்து தரித்து நின்று பயணங்களை மேற்கொள்ளும் குறித்த சேவையானது மத்திய கிழக்கு நாடுகளை தாண்டி ஐரோப்பிய நாட்டு நகரங்களிலும் சேவையினை வழங்குவது இலங்கையர்களுக்கு மிகவும் இலகுவாக அமையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.