இலங்கையில் சாதாரண பொதுமக்களுக்காக அறிமுகமாகும் ” wigo” கார்!

0
285 views

இலங்கை பொதுமக்களுக்கு எட்டமுடியாத இலக்காக கருதக்கூடிய வாகன கனவு நிறைவேறுவதற்கான அருமையான சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது.
குறிப்பாக, இலங்கையில் சாதாரண பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் இளம் நிர்வாக அதிகாரிகளுக்காகவும், 1000cc ரக டோயோட்டா வாகனம் அறிமுகம் செய்யப்படவுள்ளது
மிகவும் குறைந்த விலையில் இந்த வாகனம் சந்தையில் இறக்குமதி செய்யப்படவுள்ளது.
இந்த வாகனத்திற்கு wigo என பெயரிடப்பட்டுள்ளது.
wigo என்ற இந்த வாகனம் மிகவும் அழகான வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வாகனம் ஓட்டுவதற்கு ஆரம்பித்த நபர் ஒருவருக்கு, இது மிகவும் பழக்கமான சாரதி ஒருவருக்கு போன்று ஓட்ட முடியும் என டோயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வாகனத்தின் பின் இருக்கையில் பயணிக்கும் பயணிகளுக்கு மிகவும் இலகுவாக தங்கள் பயணங்களை மேற்கொள்ளும் வகையிலும், பொருட்கள் கொண்டு செல்வதற்கு இடவசதியுடனும் இந்த வாகனம் காணப்படுகின்றது.
தொழில்நுட்பத்துடன் கூடிய பல வசதிகள் இந்த வாகனத்தில் இணைக்கப்பட்டுள்ளது. டோயோட்டா லங்கா நிறுவனத்தினால் வழங்கப்படும் இந்த வாகனத்திற்கு 3 வருடங்களில் 100,000 கிலோமீற்றர் தூரம் பயணிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சாதாரண விலையில் பெற்றுக் கொள்ள கூடிய இந்த வாகனத்திற்கு இலங்கையினுள் அதிக கோரிக்கை உள்ளதாக டோயோட்டா லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here