பெயர் கண்டுபிடிக்கும் போட்டியில் ஒருவரும் 47 பேருடைய பெயர்களையும் சரியாக எழுதவில்லை என்பதால் நேரடி வெற்றியாளர்களாக யாரும் தெரிவு செய்யப்படவில்லை.
பட்டப்போட்டி தினத்தன்று உதயசூரியன் கழகத்தலைவர் திரு பிறேம்குமார் , தலைமை நடுவர் திரு விசியகுமார் ஆகியோரால் வல்வை மக்கள் முன்னிலையில் பதில் எழுதிய 32 பேரிலிருந்து தலா ரூபா 10000 பரிசு பெறும் 3 பேர் சீட்டிழுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டனர். அவர்கள்
1)ப.இளவரசன்
2)பா.பாஸ்கரன்
3)செ.மதீசன்
மூவருக்கும் பட்டப்போட்டியன்று மேடையில் மீன்பிடித்துறை அமைச்சர் திரு டெனீஸ்வரன் அவர்கள் மூலம் பணப்பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் பங்குபற்றிய மற்றைய 29 பேருக்கும் தலா 500 ரூபா வீதம் மறுநாள் விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தில் வைத்து பரிசில்கள் வழங்கப்பட்டன.
இப் போட்டிக்கான பரிசுகளை வழங்கிய அமரர்கள் திரு நடேசன் , திரு பரமசிவம் , திரு நவரத்தினம் குடும்பத்தினருக்கும் ஆதரவு வழங்கிய அனைவருக்கும் உதயசூரியன் கழகத்தின் சார்பில் நன்றிகள்.