தைத்திருநாளன்று வழமையாக வல்வை உதயசூரியன் உல்லாசக்கடற்கரையில் நடைபெறும் பட்டப்போட்டி திருவிழா இந்த ஆண்டும் மிகச் சிறப்பான முறையில் கோலாகலமாக நடைபெற்றது. சுமார் 40000 மக்கள் அலை போல் திரண்டு பட்டத்திருவிழாவினை சிறப்புற கண்டு களித்தனர். உதயசூரியன் உல்லாசக்கடற்கரையில் இருந்து ரேவடி உல்லாசக் கடற்கரை வரை பரந்து நின்று பார்வையிட்ட மக்கள் பட்டத் திருவிழாவை சிறப்பித்தனர். பல தரப்பட்ட ஊடகங்களும் பட்டத்திருவிழாவினை உலகெங்கும் பரிமாற சமூகம் தந்தனர். தைத்திருநாள் பட்டப்போட்டி மிக சீரான முறையில் எந்தவித இடையூறுமின்றி சிறப்பான முறையில் நடைபெற்றது. ஏறத்தாழ 56 பட்டங்கள் வானை அழகுபடுத்தும் முகமாக வான் முழுவதும் பரந்து காணப்பட்டன. இராட்சத ஓணான், அகதிகள் இடம்பெயர்வு வண்டி, இராணுவ பீரங்கி, உழவு இயந்திரம், பனிச்சறுக்கு வண்டி என பல தரப்பட்ட பட்டங்கள் வானை அலங்கரித்து கண்களுக்கு அழகு சேர்த்தன.
photos:- kuruparan