பெயர் கண்டுபிடிக்கும் போட்டியில் யாரும் வெற்றி பெறவில்லை எனினும் பரிசு வழங்கப்படவுள்ளது.
வல்வை உதயசூரியன் கழகத்தால் அறிவிக்கப்பட்ட பெயர் கண்டுபிடிக்கும் போட்டியில் பங்கு பற்றிய 32 பேரில் ஒருவரும் 47 பேருடைய பெயர்களையும் சரியாக எழுதவில்லை என்பதால் நேரடி வெற்றியாளர் எவருமில்லை. எனவே பதில்கள் எழுதிய 32 பேரிலிருந்து 3 பேர் சீட்டிலுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டு தலா 10000 ரூபா பணப்பரிசில் வழங்கப்படவுள்ளது. இவர்களுக்கு பட்டப்போட்டி அன்று பரிசில் வழங்கப்படும்.
மற்றைய 29 பேருக்கும் தலா 500 ரூபா வீதம் பரிசு வழங்கப்படும். இவை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 – 6:00 மணிவரை விக்னேஸ்வரா வாசிகசாலையில் வழங்கப்படும்.