கனடா ரொரன்ரோ புளுஸ் நேற்று முன்னாள் போராளிக்கு பசுமாடு வழங்கியது..
கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் வன்னியில் வாழும் ஒரு காலை இழந்த முன்னாள் கடற்புலி போராளி குமணன் என்ற சந்திரலிங்கம் விஜயபாஸ்கர் என்பவருக்கு நேற்று 28.12.2016 அன்று பசு மாடு ஒன்றை வாழ்வாதார உதவியாக வழங்கியது.
தற்போது முல்லைத்தீவில் பொன்னர் முள்ளியவளை என்ற இடத்தில் வாழ்ந்துவரும் இவருக்கு வீடுதேடிச் சென்று இந்த உதவி வழங்கப்பட்டது.
சுமார் 150.000 பெறுமதியான பசு மாடும் அதை பயன் தரும்வகையில் வளர்த்தெடுக்க முதலாவது உதவியாக 10.000 ரூபா ரொக்கப்பணமும் வழங்கப்பட்டது.
உதவிகளை வழங்கும் பணிகளை ரியூப் தமிழ் இளைஞர்கள் முன்னெடுத்தார்கள்.
இந்த உதவியால் தான் மிகவும் மனம் மகிழ்ந்துள்ளதாகவும்இ தன்னைப் போன்ற போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பலர் இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கான உதவிகள் சென்றடையவில்லை என்றும் குமணன் தெரிவித்தார்.
தன்னைப்போலவே மற்றவர்களுக்கும் உதவிகள் தொடர வேண்டுமெனவும் அத்தருணம் கேட்டுக்கொண்டார்.
மழை பெய்து கொண்டிருந்தாலும் வருட முடிவிற்குள் வன்னிஇ மட்டக்களப்புஇ தாண்டிக்குளம் ஆகிய இடங்களில் போரினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்கும் பணிகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் அமைப்பும் ரியூப்தமிழும்.
போரினால் பாதிக்கப்பட்டு கால் ஒன்றை இழந்துஇ சிறையில் வாடி வாழ்வின் சவால்களை எதிர்கொண்டு போராடும் இந்த இளைஞருக்கு வழங்கப்படும் பசுமாடு அவருடைய அன்றாட வாழ்வின் தேவைக்கு பெரும் உதவியாக அமையும் என்பதை சொல்லவேண்டிய தேவை இல்லை.
தினசரி 20 லீட்டர் அளவில் பால் தரும் இந்த மாடு அவருக்கு கிடைத்த புதிய நம்பிக்கை.. தற்போது பசு மாடு ஒன்றின் விலை 150.000 ருபாவரை செல்கிறதுஇ இதன் விலை இடத்திற்கிடம் வேறபட்டும் காணப்படுகிறதுஇ மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறி மாடுகளை கொண்டு செல்வதில் பலத்த சிரமங்களும் உள்ளனஇ இவற்றுக்கிடையில் பணிகளை ரியூப்தமிழ் இளைஞர்கள் இரவு பகலாக முன்னெடுத்து காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறார்கள்.
இதுபோல நாளை மட்டுநகரில் இருவருக்கும் நாளை மறுதினம் தாண்டிக்குளத்திலும்; இதே பசுமாடு வழங்கும் உதவி தொடர இருக்கின்றன..
இதுபோல சென்ற வாரம் போராளி ஒருவருக்கு வளர்ப்பு மீன்களும்இ கோழிக்குஞ்சுகளும் வழங்கப்பட்டனஇ இன்னொரு போராளிக்கு முச்சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.
புது வருடம் பிறக்கும் போது அதை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வசதியாக உதவிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.