வடமாகாண விளையாட்டுத்திணைக்களத்தினால் நடத்தப்பட்ட 10 கிலோ மீற்றர் ஊர் சுற்றும் போட்டி நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்டங்கள் பெற்ற புள்ளிகள்அடிப்படையில் ஆண்கள்பிரிவில் வவனியாமாவட்டம் சம்பியனாகியதுடன் யாழ் மாவட்டம் இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.பெண்கள்பிரிவில் முல்லைத்தீவு சம்பியனாகியதுடன் மன்னார் இரண்டாமிடத்தைப்பெற்றுக்கொண்டது.
இதேவேளை ஆண்கள் பிரிவில் கிளிநாச்சி மாவட்டத்தைச்சேர்ந்த ரி அன்ரனி டெல்மன் எஸ் .நிர்மல் மற்றும் ஆர்.அனோஜன் ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் பென்கள் பிரிவில்முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த எம்.மேரி ஜென்சி முதலாமிடத்தையும் வவுனியா மாவட்டத்தைச்சேர்ந்தகே.சாளினிஇரண்டாமிடத்தையும் முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த எஸ் விதுசனா மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.