வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்குப் பகுதியிலுள்ள மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 16 கிலோக்கிறாம் கஞ்சா பருத்தித்துறைப் பொலிஸாரினால் நேற்றுக் கைப்பற்றபட்டுள்ளது. மயானத்திற்கு சென்ற பொதுமக்கள் கஞ்சாப் பொதிகளைக் கண்டு பருத்தித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார் 8 பொதிகளாக பையில் கட்டப்பட்டிருந்த கஞ்சாப் பொதிகளைக் கைப்பற்றினர்.