நடா புயலின் காரணமாக வடக்கில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ். குடாநாட்டில் நேற்றைய தினம் சில சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 24 வீடுகள் சேதமடைந்துள்ளன. இவ்வாறு சேதமடைந்த வீடுகளில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் மாதகல் கிழக்கில் உள்ள ஓர் வீடும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒர் வீடும் முழுமையாக சேதமடைந்துள்ளன. மற்றும் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு இன்பருட்டி எரிஞ்ச அம்மன் கோவில்ப் பகுதியிலிருந்து இரு படகுகளில் சென்ற நான்கு மீனவர்களும் சுப்பர் மடம்பகுதியிலிருந்து படகில் சென்ற இருவரும் குடத்தனை பொற்பதியிலிருந்து சென்ற இருவருமாக எட்டுப்பேரே இவ்வாறு கடற்றொழிலுக்குச்சென்று காணாமல் போனவர்களாவார். .நேற்று முன்தினம் இரவு முதல் கடலில் பெரும் காற்றுடன் அலை அடித்ததாகவும் அதற்குள் சிக்கி திசைமாறிச்சென்றிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பல சேதங்களும் இடம்பெற்றுள்ளன.










