கடற்தொழிக்கு சென்ற எண்மர் நேறாறுமாலை வரை கரைதிரும்பவில்லை எனத்தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு இன்பருட்டி எரிஞ்ச அம்மன் கோவில்ப் பகுதியிலிருந்து இரு படகுகளில் சென்ற நான்கு மீனவர்களும் சுப்பர் மடம்பகுதியிலிருந்து படகில் சென்ற இருவனும் குடத்தனை பொற்பதியிலிருந்து சென்ற இருவருமாக எட்டுப்பேரே இவ்வாறு கடற்றொழிலுக்குச்சென்று காணாமல் போனவர்களாவார். .நேற்று முன்தினம் இரவு முதல் கடலில் பெரும் காற்றுடன் அலை அடித்ததாகவும் அதற்குள் சிக்கி திசைமாறிச்சென்றிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை கடலில் ஏற்பட்ட அலையினால் வலையை இழுக்கமுடியாத நிலையில் வல்வெட்பித்துறைச் சேர்ந்த மீனவர் ஒருவர் பல இலட்சம் பெறுமதியான வலையை அறுத்து விட்டு தப்பிவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை நேற்று காணப்பட்ட சீரற்ற கானணமாக வடமராட்சிப் பிரதேசத்திலுள்ள கரையோரப்பாடசாலைகள் இயங்கவில்லை.ஏனைய பாடசாலைகளிலும் மாணவர் வரவு குறைந்து காணப்பட்டதுடன் மதியத்துடன் பாடசாலைகள் மூடப்பட்டன.