வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் (பருத்தித்துறை) புனைகதை இலக்கியம் தொடர்பான பயிலரங்கு நிகழ்வு நேற்று முன்தினம் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலர் இ .த ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்ற இப் பயிலரங்கின் வளவாளர்களாக மூத்த எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் , கலாநிதி சு. குணேஸ்வரன் கலந்து பயிலரங்கை நிகழ்த்தினர். வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் உயர்தர வகுப்பு பாடசாலை மாணவர்களும் மற்றும் படைப்பாளிகள், ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.