பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளுடன் சென்ற பஸ் மீது இனந்தெரியாத நபர்கள் கல்வீசித்தாக்கியதில் கண்ணாடிகள் சேதமடைந்தன.
நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணம் செய்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பஸ் மீதே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது.
குறித்த பஸ் பருத்தித்துறை கொடிகாமம் வீதியில் சென்றுகொண்டிருந்த போது கலிகைச்சந்திக்கும் கோயிற்சந்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இனந்தெரியாதவர்களின் இத்தாக்குதலால் பஸ்ஸின் பின்பகுதி கண்ணாடிகள் நொருங்கி சேதங்கள; ஏற்பட்ட போதும் பயணிகள் எவரும் காயங்களின்றி தெய்வாதீனமாக தப்பித்தனர்.
அதனையடுத்து பருத்தித்துறை சாலையிலிருந்து வேறொரு பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகள் தமது பயணத்தைதொடர்ந்து மேற்கொண்டனர். இதுதொடர்பாக சாலை முகாமையாளர; நெல்லியடிப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.