மரண அறிவித்தல்
திருமதி.மலர்ரோவிணி அம்மா அருமைச்சந்திரலிங்கம் (அம்மன்)
மலர்வு:- 22.12.1947 உதிர்வு :- 01.01.2015
யாழ். வல்வெட்டித்துறை ஊரணியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மலர்ரோவிணி அம்மா அருமைச்சந்திரலிங்கம் அவர்கள் 01-01-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை(ஆறுமுகசாமி), சீதாலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சேவரெத்தினா, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற அருமைச்சந்திரலிங்கம்(அருமை) அவர்களின் அன்பு மனைவியும்,அமுதராஜன்(லண்டன்), கபிலராஜ்(நோர்வே), கலாஜினி(கனடா), ரகுராம்(கனடா), கீதா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற சுபாஸ்சந்திரபோஸ், காந்திமதி, சரச்சந்திரபோஸ்(கட்டி), அரிச்சந்திரபோஸ்(அரிச்சம்), பத்மாவதி, காலஞ்சென்ற ஜெயச்சந்திரபோஸ், செல்வச்சந்திரபோஸ் , இந்துமதி, ஞானச்சந்திரபோஸ், யோகச்சந்திரபோஸ், பானுமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,அசோக்குமார், வாசன், பிரதீபா, மைதிலி, சசிகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், அப்புலிங்கம், மற்றும் ஜெயராமச்சந்திலிங்கம்(அக்குட்டி), ஜெயலிங்கம், சந்திரவதனா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கௌதம், கொசிகா, அஜிதன், அஜய், ஆதர்சன், அபிலாஸ், அக்ஷயன், மாதினி, நிலானியா, அபிஷன், சுதர்சன், கார்த்திக், அபிராமி, அஜிதா, சங்கமி, கிரிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 07/01/2015 (புதன்கிழமை) மு.ப 11:00 மணிக்கு Glendale Funeral Home & cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
ராஜன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447868703259
கபிலராஜ் — நோர்வே
தொலைபேசி: +4721390472
கலா — கனடா
தொலைபேசி: +19057944761
ரகுராம் — கனடா
செல்லிடப்பேசி: +14169927801
கீதா — கனடா
செல்லிடப்பேசி: +16475210137