வல்வை இளைஞர் விளையாட்டுக்கழகம். நடத்தும் சிதம்பரா கல்லூரி முன்னாள் அதிபர் யோகச்சந்திரன் ஞாபகார்த்த 40வயதுக்கு மேற் பட்டோருக்கான உதைப்பந்தாட்ட தொடர் கம்பரமலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்திதில் இடம்பெற்று வருகின்றது. அதில் நேற்று இடம்பெற்ற காலிறுதியாட்டத்தில் வல்வை விளொயாட்டுக்கழகமும் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகமும் மோதின
முதல் பாதியாட்டத்தில் 2:0என்ற கோல் அடிப்படையில் முன்னிலை வகித்தது யங்கம்பன் அணி யோகானந்தன் அநுரா காந்தன் தலா ஒவ்வொரு கோல் பெற்றுக் கொடுத்தனர் இரண்டாவது பாதியாட்டத்திலும் யோகானந்தன் அபாரமாக தொடர்சியாக 4 கோல்களைப்போட ஆட்ட நேர முடிவில் 6:2 என்ற ரீதியில் வல்வை அணியை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது யங்கம்பன்ஸ் அணி