வல்வை நெடியகாட்டைச் சேர்ந்த திரு.இ.ஞானசுந்தரம் (கட்டி அண்ணா) அவர்களுக்கு கலைப்பரிதி விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.

0
561 views

வல்வை நெடியகாட்டைச் சேர்ந்த திரு.இ.ஞானசுந்தரம் (கட்டி அண்ணா) அவர்களுக்கு கலைப்பரிதி விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவை இன்று (28.10.2016) நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா – 2016 இல் ஆன்மீகத்திற்கான மேற்படி விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
திரு.இ.ஞானசுந்தரம் அவர்கள் வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் மற்றும் ஏனைய ஆலயங்களிலும் புராணப்
படிப்பு மற்றும் சமய சொற்பொழிவுகளையும் மேற்கொண்டு வருவதுடன்.
ஆரம்பகால 1970 களில் கணபதி மின் அமைப்பாளர்களின் பொறுப்பாளரும்இ 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராட்சி மாநாட்டின்போது சூரியன் வடிவத்திலான மின் அலங்காரத்தை வடிவமைத்து கட்டி வல்வெட்டித்துறைக்கு பெருமையை சேர்த்து அன்றைய யாழ் மாவட்ட மக்களின்இ தமிழ் அரசியல் தலைவர்களின் பாராட்டை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
அவரது ஆன்மீகப் பணிகள் மேலும் தொடர சமூகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here