28.10.2016 அன்று வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்,வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் கலாச்சார பேரவை ஆகியன திக்கம் கலாச்சார மண்டபத்தில் பண்பாட்டு பெருவிழா நடத்தியிருந்தனர்.
விழாவிற்கு பிரதேச செயளாளர் இ.த.ஜெயசீலன் தலைமைவகித்ததுடன் சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் கௌரவ த.குருகுலராசா அவர்களும் கலந்து கொண்டிருந்தார். மேற்படி விழாவில் திரு.சிவாகிருஸ்ணமூர்த்தி ஆசிரியர் அவர்கட்கு கலைப்பரிதி விருது வழங்கப்பட்டது.
திரு.சிவாகிருஸ்ணமூர்த்தி ஆசிரியர் பந்தராமுல்ல மத்திய கல்லூரியில் ஆசிரியராக பணி ஆரம்பித்து பின்னர் காட்லிக் கல்லூரியில் 11 வருடங்கள் ஆசிரியராக பணியாற்றினார். ஆதன் பின்னர் கொழும்பு இந்து கல்லூரியில் 25வருடங்கள் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார். கொழும்பு இந்து கல்லூரியில் 15வருடங்கள உப அதிபராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.