பரந்து நிழல்தர ஆரம்பித்துள்ள நிழல்கள் அமைப்பு

0
332 views

முதலில் ஒருசில நெருங்கிய நண்பர்கள் இணைந்து ஆரம்பித்த உதவும் அமைப்பு இப்போது பரந்து பெருகி தனது உதவிக் கரத்தை தமிழர்தாயகத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர்கிறது.
தமிழர் தாயக பகுதியில் நடாத்திவரப்படும் ஒரு ஆதரதவற்ற சிறுவர்நிலையத்தில் உள்ள முன்நூறு சிறுவர்களையும் இப்போது நிழல்கள் அமைப்பு பொறுப்பெடுத்துள்ளது.
அதன் முதற்கட்டமாக பத்து சிறுவர் சிறுமிகளுக்கு அவர்களுக்கென்று ஒரு வங்கி கணக்கை ஆரம்பித்து அதில் வைப்புபணமாக 10000ரூபா (இலங்கைபணம்) வைப்பிலிட்டு அதன் சேமிப்புபுத்தகத்தை சிறுவர்களிடம் ஒப்படைத்துள்ளது.அதன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
அத்துடன் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் தமிழ்குடும்பங்களுக்கு உதவும் திட்டம் ஒன்றையும் நிழல்கள் அமைப்பு இப்போது முன்னெடுத்துள்ளது.அதன் ஒரு கட்டமாக வசதிகளற்ற இரண்டு குடும்பங்களுக்கு பணம் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.இந்த உதவி அவர்கள் தமது அன்றாட வருவாய்க்கான ஒரு முதலீடாகவே பயன்படுதடத வேண்டும் என்ற உத்தரவாதத்துடனேயே வழங்கப்படுகின்றது.இதன்மூலம் யாரிலும் தங்கி இராத நிலையில் அந்த குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தலாம் என்பது நிழல்கள் அமைப்பின் நோக்கமாகும்.
மேலும் நிழல்கள் அமைப்பு வெகுவிரைவில் அதன் செயற்பாடுகள்இமற்றும் அதன் மற்றைய விபரங்கள் அனைத்தும் மக்களின் பார்வைக்கு இணையம் மூலம் சமர்ப்பிப்போம்.இதற்கு முன்னரும்கூட பல குடும்பங்களுக்கும் ஆதரவற்ற பல சிறுவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டிய நிழல்கள் அமைப்பு அங்கு அத்தியாசவிய தேவைகளைக்கூட நிறைவேற்றுவதற்கு நிதிஆதாரம் அற்ற குடும்பங்களுக்கும் அந்த குடும்பங்களின் வருங்கால செல்வங்களுக்கும் உதவுவதில் இனிவரும் காலங்களில் பல திட்டங்களை தீட்டி முனைப்புடன் செயலாற்றும்.
மேலும் இதுவரைநாளும் எமது உதவும் திட்டங்களுக்கு ஆதரவுக்கரம் தந்த எமது நண்பர்கள்இ உறவுகள் என்று அனைவருக்கும் எமது மனம்நெகிழ்ந்த அன்புகளும் நன்றிகளும்.
உதவி செய்த அனைவரது பெயர்விபரங்களும் முழுமையாக எமது இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.
ஏதுமற்ற எமது மக்களுக்கு நிழலாக நாம் என்றும் இருந்திடுவோம்.
தம் கால்களில் தாமே எழுந்து நிற்க பொருளாதார அடித்தளம் இடுவோம்.
வசதியற்ற எம் தாயகத்து சிறுவர்களுக்கு நம்பிக்கை மிகுந்த பொருளாதார எதிர்காலம் அமைப்போம்.
நிழலாக என்றும் நாம்….
செப்டம்பர் மாத உதவியாக வன்னி விழிப்புலன் அற்றோர் சங்கத்தின் ஜந்து சிறுவர்களுக்கு தலா ரூபா 10,000 அவர்கள் பெயரில் COMMERCIAL BANK இல் நிரந்தர வைப்பு பணமாக வைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களின் பெயர் விபரங்கள் 1.ஞானேந்திரன் ராகினி 2.இரட்ணசிங்கம் இசையகன் 3.மதிவதனன் விருசங்கா 4.ளு.அபிவர்மம் 5.கருணாகரன் சீராளன்
அத்துடன் இரண்டு விதவை தாய்மார்களின் வாழ்வாதாரத்துக்காக ரூபா 10,000 வீதம் .. ளு.சிவகுமாரி – பொக்கனை, அ.சோபனா – யாழ்ப்பாணம்
நிழல்கள் தொண்டு அமைப்புக்கு செப்டம்பர் (2016) கொடுப்பனவுக்கு உதவிக்கரம் நீட்டிய அன்பர்கள் விபரம்…
அம்மன் தேங்காய் மண்டி (திருச்சி) இந்திரன் – மணி – £200-00 இராசசிங்கம் படையப்பா – £50-00 வாசுதேவர் நேரு – £50-00 தங்கராசா நீதவான் – £50-00

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here