அல்வாய் மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் மின்னொளியில் நடத்திய கிறிக்கற் சுற்றுப்போட்டியின் இறுதியாட்டங்கள் நாளை

0
413 views

அல்வாய் மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் மின்னொளியில் நடத்திய கிறிக்கற் சுற்றுப்போட்டியின் இறுதியாட்டங்கள் நாளை வியாழக்கிழமை இரவு 7 30 மணிக்கு குறித்த மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
கழகத் தலைவர் த.வேணுகானன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வலி வடக்குப் பிரதேச முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன் கலந்து கொள்ளவுள்ளார்.
இதில் அணிக்கு 5 பந்துப்பரிமாற்றங்கள் கொண்ட இறுதியாட்டத்தில் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கூவில் தீபஜோதி விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளன.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here