“யாழ்நகர் – கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ்” இரட்டை நகர உடன்படிக்கை முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் லண்டனில் இடம்பெற்றது

0
516 views

பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் (Kingston upon Thames) என்ற மாநகரம் யாழ்ப்பாணத்துடன் வரலாற்றுமுக்கியத்துவம் மிக்க ஒரு இரட்டை நகர உடன்படிக்கையை இன்று செவ்வாய்க்கிழமை செய்துகொள்ளவிருக்கின்ற நிலையில்இ நேற்று திங்கட்கிழமை அது தொடர்பிலான முதலாவது கலந்துரையாடலும் பயிற்சிப்பட்டறையும் நடைபெற்றது.


கிங்ஸ்ரனில் உள்ள வாரன் ஹவுசில் நடைபெற்ற இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை அதிகாரிகள்இ கிங்ஸ்ரன் கவுன்சில் கவுன்சிலர்கள்இ மற்றும் பிரித்தானியாவின் தமிழ் சமூகத்தை சேர்ந்த பல் துறை சார் நிபுணர்கள் ஆகியோர் கலந்துகொண்டு எவ்வாறு இந்த இரட்டை நகர உடன்படிக்கையின் கீழ் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று கலந்துரையாடினர். இந்த நிகழ்வில் கனடாவின் மார்க்கம் நகர கலந்துரையாடல் கவுன்சிலர் லோகன் கணபதி உட்பட மூன்று தமிழ் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரித்தானியாவின் தமிழ் அமைப்புக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் விளையாட்டு மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் செயற்த்திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
இந்த பயிற்சிப் பட்டறையில் வாடா மாகாணத்தின் பல்வேறு தேவைகள் மற்றும் வாய்ப்புக்கள் பற்றி முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண சபை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இந்த பயிற்சி பட்டறையின் பின்னர் நடைபெற்ற ஒன்றுகூடல் மற்றும் மதியபோசனத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றினார். இந்த நிகழ்வில் அழைப்பிதழ் அடிப்படையில் தமிழ் சமூகத்தை சேர்ந்த சுமார் 100 வரையிலான தமிழ் செயற்பாட்டளர்கள் மற்றும் தொழில்துறை சார் நிபுணர்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை நாளை மாலை கிங்ஸ்ரன் கவுன்சிலின் கில்ட் மண்டபத்தில் நடைபெற பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் சுமார் 150 பேர் வரை கலந்துகொள்வர். அத்துடன் இந்த நிகழ்வை இணையம் ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது.


நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பிரித்தானியாவில் உள்ள தமிழ் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் அதிபர்களை முதலமைச்சர் சந்திக்கிறார். எத்தகைய அபிவிருத்தி செயற்த்திட்டங்களை வட மாகாணத்தில் முன்னெடுக்கலாம் என்பது தொடர்பிலும் எவ்வாறு இந்த இரட்டை நகர் உடன்படிக்கையை ஆக்கக்கூடுதலான அளவில் பயன்படுத்தலாம் என்பது தொடர்பிலும் இந்த நிகழ்வில் ஆராயப்படவுள்ளது.
இந்த நிகழ்விலும் சுமார் 100 பேர் வரை கலந்து கொள்வர். இதனை பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனம் ஒழுங்கு செய்துள்ளது.
முதலமைச்சர் தனது இந்த விஜயத்தின்போது கிங்ஸ்ரன் கவுன்சிலின் அனுசரணையுடன் கிங்ஸ்ரன் வைத்தியசாலைஇ கிங்ஸ்ரன் பல்கலைக்கழகம் மற்றும் கிங்ஸ்ரனில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் ஸ்தாபனங்களுக்கும் விஜயம் செய்து இந்த உடன்படிக்கையின் கீழ் எத்தகைய பலாபலன்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆராய்வார்.
இதேபோன்ற உடன்படிக்கையினை யேர்மனியின் ஆல்டென்பெர்க் மற்றும் தென் கொரியாவின் குவானக்-கு ஆகிய மா நகரங்களுடனும் கிங்ஸ்ரன் மாநகரம் செய்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here