வல்வெட்டித்துறை பிரதேசத்திற்கு உட்பட்ட 21 வயதுப்பிரிவினருக்கு நடத்தப்பட்ட கால்ப்பந்தாட்டத்தொடரில் வல்வை ரேவடி விளையாட்டுக் கழகம் கிண்ணத்தை சுவீகரித்தது.
தங்கவேல் அப்பாவின் பெற்றோர் ஞாபகார்த்தமாக நடத்தப்பட்ட கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் நேற்று இடம்பெற்றது.
இவ்விறுதியாட்டத்தில் வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகமும் வல்வை ரேவடி விளையாட்டுக்கழகமும் பலப்பரீட்சை நடத்தின.இதில் தொடக்கம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக இடமபெற்ற ஆட்டத்தில அபாரமாக செயற்ப்பட்ட வல்வை ரேவடி அணி 5:2 என்ற கோல்க்கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.
போட்டியின் தொடர் ஆட்டநாயகனாக அவ்வணியின் முன்கள வீரர் சீலன் தெரிவு செய்யப்பட்டார்