தேசிய தடகளப் போட்டியில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கோலூன்றிப் பாய்தலில் சாதனை படைத்த மகாஜனா மங்கையும் வடமாகாண மங்கையுமான ஜெகதீஸ்வரன் அனித்தா தெல்லிப்பளை கிறாஸ்கொப்பர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் குழுமத்தினரின் விசேட ஏற்பாட்டில் ஸ்மார்ட் ரச் கைத்தொலைபேசி நிறுவனத்தினரால் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
சாதனை மங்கைக்கு பெறுமதிவாய்ந்த “ரப் பார்ட்” ஒன்றும் பயிற்றுநர் சி.சுபாஸ்கரனும் பெறுமதிவாய்ந்த கைத்தொலைபேசி ஒன்றும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். சாதனை நிகழ்த்தப்பட்ட நடைபெறும் துரையப்பா விளையாட்டு அரங்கில் வைத்து கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
இவ்வாறு எமது வீரர்களை புரவலர்கள் கௌரவித்து ஊக்கப்படுத்தும் போதுதான் அவர்களால் சாதனை படைத்து எமது பிரதேச விளையாட்டுத்துறையை முன்னேற்ற முடியும். அன்பர்களே கொடை வள்ளல்களே பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் வீரர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்களாக!!!!
`