1974 நண்பர்கள் குழு ஆகிய நாங்கள், எதிர்வரும் 25/09/2016 ஞாயிற்றுக்கிழமை எமது மறைந்த பள்ளி நண்பிகள்,நண்பர்கள் நினைவாக நடாத்த உள்ள உதை பந்தாட்ட சுற்று போட்டியின் போது வல்வையின் நல் அன்பு உள்ளம்கள் அனைவரையும் வரவேட்கிறோம்..
குறிப்பாக லண்டன் வல்வையர்களின் ஆஸ்தான புகைப்பட கலைஞர்
திரு :கே. பி அண்ணா மற்றும் தொலைதூர ஒளிப்பட கலைஞர்
திரு :மாச்சா என்றழைக்கப்படும் மகேந்திரகுமார் மற்றும்
வல்வையின் முன்னாள் இந்நாள் உதைபந்தாட்ட வீரர்கள்,
லண்டன் வல்வையர்களின் முன்னேற்றத்துக்காக அயராது பாடுபடும் முன்னாள் இந்நாள்
வல்வை நலன்புரி சங்கத்தினர் அனைவரையும்,
வல்வை “ப்ளூஸ்” விளையாடடு கழக உறுப்பினர்கள் அனைவரையும்,
CWN குழுமத்தினர்,
CWN 11PLUS குழுமத்தினர்,
VVTUK.COM சர்வதேச வலையமைப்பினர்,
VALVAINEWS.ORG சர்வதேச வலையமைப்பினர்,
மற்றும் வல்வையின் கட்டமைப்பை காத்திட கழகமாகவும்,மன்றமாகவும் பழைய பாடசாலை மாணவர்கள் நிர்வாகமாகவும், ஏன் தனி நபராகவும் செயலாற்றி வரும் வல்வை ஊரை சேர்ந்த போர் குணம் கொண்ட ஒவ்வொருவரையும்,
இரு கரம் கூப்பி எமது இந்த விழாவை சிறப்பிக்குமாறு பேரன்புடனும் பேராவலுடனும் வரவேட்கிறோம்…
இது உங்கள் வீட்டு விழா ..
இது உங்கள் பிள்ளைகளின் ஒன்று கூடல்…
கால காலமாய் பிரதேச கழகமாய் அணிகளாய் விளையாடி வாதம்களை முன்வைத்த நாம் எல்லோரும் வல்வையரே என்று வடம் பிடித்த வல்லவர்கள் கூடும் விழா இது…
எம் பள்ளி நண்பர்களின் நினைவை மீட்டும் இந்நாளில் நீங்கள் அனைவரும் கூடும் இந்நாளே எமக்கு பொன் நாள்..