வளர்மதியின் கிறிக்கற்ப்போட்டித் தொடரில் நெல்லியடி நண்பர்கள் விளையாட்டு கழகத்தை 30 ஓட்டங்களால் விழ்த்தி அரையிறுதியாட்டத்திற்கு முன்னேறியது வல்வை விளையாட்டுக்கழகம் .
நவிண்டில் வளர்மதி விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரிதியாக நடத்தும் 21 வயதுக்குட்பட்டோருக்கான கிறிக்கற்ச் சுற்றுப்பொட்டி குறித்த மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது அதில் நேற்று முன்தினம் இடம்பெற்ற காலிறுதியாட்டத்தில் வல்வை விளையாட்டு கழகமும் நெல்லியடி நண்பர்கள் விளையாட்டு கழகமும் மோதின.நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடக்களமிறங்கிய வல்வை அணி நிரணயிக்க்பட்ட 6 பந்துப்பரிமாற்றங்களில் ஒரு இலக்கை மட்டும் இழந்து 61 ஓட்டங்களைப்பெற்றது.அவ்வணிசார்பாக கபிலன் 27 ஓட்டங்களையும் பிரதீஸ் 12 ஓட்டங்களையும; மணிமாறன் 15 ஓட்டங்களையும; பெற்றுக்கொடுத்தர். பதpலுக்கு 62 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நெல்லியடி நண்பர்கள் அணி எதிரணியின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஒற்றை இலக்கங்களுடன் விரர்கள் ஆட்மிழந்து வெளியேற 6 பந்துப்பரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்த வெறும் 31 ஓட்டங்களைப்பெற்று 30 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவ வல்வை அணி அரையிறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.