வலாற்றுச்சிறப்பு மிக்க தொண்டைமனாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்திருவிழா இன்று பல்லாயிரக்கணக்கான மக்களின் அகோரகா கோசத்துடன் இடம்பெற்றது. இலங்கையின் நாலா திக்கிலுமிருந்து பெரும்திரளான மக்கள் திரண்டு எம் பெருமானின் அருள் பெற்று ஏகினர். காலையில் இடம்பெற்ற அபிடேக ஆராதனைகளைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு தேறி ஏறி வீதிவலம் வந்து 11 மணிக;கு மீண்டும் இருப;பிடம் வந்து அமர்ந்தார்.
ஆலய சூழலில் இடம்பெறும்;சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த வல்வெட்டித்தறை அச்சுவேலி நெல்லியடி மற்றும; பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தைச்சேர்ந்த பொலிஸார் சீருடையுடனும் சிவில் உடைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.இலங்கைச் சாரணர் சங்கத்தினர் முதலுதவிப்படைப்பிரிவினர் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் தாக சாந்தியை போக்குவதற்கு ஆலயச்சூழலில் தாக சாந்திநிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.ஆலயச்சூழலுள்ள அன்னதான மடங்களில் அன்தானமும் வழங்கப்பட்டன.