இராணுவத்தினர் தாம் நினைத்தவாறு இங்கு செயற்பட முடியாது : வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்……

0
354 views

வடமாகாண சபையின் 61 ஆவது அமர்வு நேற்று காலை கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது.
அதன்போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
யாழ்.மாவட்ட கட்டளை தளபதி யாழ்.மாவட்ட செயலாளருக்கு தாம் சுவீகரிக்க உள்ள காணிகள் தொடர்பில் அறிவித்து உள்ளார். அதன் பிரகாரம் யாழ்.மாவட்ட செயலாளரும் காணி உரிமையாளருக்கு இராணுவ கட்டளை தளபதி கூறியதன் அடிப்பையில் கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் சிலருக்கு காணிகள் மீள கையளிக்கப்படும் எனவும் இன்னும் சிலருக்கு அடுத்த வருடத்தில் காணிகள் கையளிக்கப்படும் எனவும் ஏனையோரின் காணிகளை சுவீகரிகரித்து விட்டு அதற்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவpத்துள்ளார்.
இவ்வாறு இராணுவம் தான் நினைத்த மாதிரி காணிகளை சுவீகரிக்க முடியாது என முதலமைச்சர் தெவித்தார்.
இதேவேளை மாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன் அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த போது இராணுவ ஆட்சியின் போதே இவ்வாறன செயற்பாட்டில் ஈடுபட முடியும். மக்களாட்சியில் இராணுவத்திற்கு காணி தேவை எனில் அவர்கள் பாதுகாப்பு அமைச்சிடமோ அல்லது அதன் செயலாளரிடமோ கேட்டு அவர்களே மாவட்ட செயலாளருக்கு அனுப்ப முடியும். அதனை விடுத்து இராணுவ தளபதி மாவட்ட செயலாளருக்கு அறிவிக்கும் அதிகாரமில்லை.
இராணுவ தேவைக்காக காணி சுவீகரிக்கப்பட வேண்டும் எனில் என்ன இடத்தில் எவ்வளவு காணி தேவை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பாராளுமன்றுக்கு அறிவித்து அது தொடர்பில் பாராளுமன்றில் விவாதிக்கப்பட்டு குறித்த காணியில் இருந்த மக்களை எங்கு குடியேற்றுவது அவர்களுக்கான வாழ்வாதாரம் என்ன என்பது தொடர்பில் முடிவெடுத்தே காணிகளை சுவீகரிக்க முடியும்.
ஆனால் வடக்கில் தனியார் காணிகளை இராணுவத்தினர் அடாத்தாக அபகரித்து வைத்துக் கொண்டு அவற்றை இராணுவ தேவைக்கு சுவீகரிக்கின்றோம் என கூறுகின்றார்கள் இவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here