சோக மயமான லண்டன்!! கடலில் மூழ்கி பலியான ஐந்து மாணவர்களின் இறுதி பயணத்தில் பல்லாயிரம் மக்கள்

0
589 views

மூவாயிரத்துக்கும் மேல்பட்ட மக்களின் கண்ணீரின் மத்தியில் இடம்பெற்ற இறுதிவணக்க நிகழ்வு.பிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் மூழ்கி பலியான ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று லண்டனில் நடைபெற்றன.சோக மயமான லண்டன்.
காலை 6 மணி முதல் பத்துமணி வரை Winn’s Common Park, King’s High Way, Plumstead Common, London, SE18 2LN எனும் இடத்தில் இறுதி நிகழ்வுகள் மூவாயிரத்துக்கு மேல்பட்ட மக்களின் மக்களின் கண்ணீரின் மத்தியில் இடம்பெற்றன.கடந்த 24ஆம் திகதி கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் இறுதிக் கிரியை நிகழ்வானது, கடல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.பிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தமை புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்தது.இதில் கெனூஜன் சத்தியநாதன், கோபிகாந்தன் சத்தியநாதன், நிதர்சன் ரவி, இந்துஷன் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் குருசாந்த் ஸ்ரீதவராஜா ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.மக்கள் அதிகமாகக்கூடும் பிரித்தானிய கடற்கரைகளில் உயிர்காப்பு பணியாளர்களின் பற்றாக்குறை குறித்த வாதப்பிரதிவாதங்களையும் இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here