காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த குமார வெல்கம, டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் இந்த ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தனர். அத்துடன் அவர்கள் அதே ரயிலில் பயணம் செய்து யாழ். ரயில் நிலையத்தை வந்தடைந்தனர். ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் பெருளமளவான பொதுமக்கள் நின்று இந்த ரயில் சேவையைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.