டென்மார்க் கொல்ஸ்ரபோ நகரில் வசிக்கும் திரு.திருமதி தெய்வேந்திரன் தம்பதியரின் அருமைப்புதல்வி சோபிதா தெய்வேந்திரன் பொருளியல் துறையில் கன்டிடேட் தர பரீட்சையில் பத்து புள்ளிகள் எடுத்து சித்தியடைந்துள்ளார்.
சோபிதாவின் பெற்றோர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்களாகும் தந்தையார் தெய்வேந்திரன் வடிவேலு அப்பாத்துரை மாஸ்டரின் மைத்துனராவார் வல்வை ஆலடியை சேர்ந்தவர்இ தாயார் ராணி தெய்வேந்திரன் வல்வை சந்தியை சேர்ந்த கதிர்காமலிங்கம் தம்பதியரின் மகளாவார்.
தந்தையார் தெய்வேந்திரன் வடிவேலு டென்மார்க் வல்வை ஒன்றியத்தின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர்.
பாPட்சையில் சித்தியடைந்து டென்மார்க் ஒல்போ பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியே வரும்போது பெற்றோர் சகோதரன் அனைவரும் இவருக்கு மலர் செண்டு வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர்.
டென்மார்க்கில் வாழும் தமிழ் இளையோர் ஒரு சில மரபு சார் கற்கைத் துறைகளை விடுத்து புது புது துறைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியதின் இன்னொரு உதாரணமாக பொருளியல் துறையில் இவர் பெற்ற வெற்றி திகழ்கிறது.
சுமார் ஐந்தாண்டு காலம் இடைவிடாது கற்று பல்வேறு பரீட்சைகளையும்இ ஆய்வுகளையும் எழுதி இந்த இலக்கை தியாகத்துடன் எட்டித்தொட்டுள்ளார்.
இதுவரை பட்ட துயர்கள் எல்லாம் பரீட்சை வெற்றியோடு காற்றாக பறந்துவிட்டதன்றோ…
டென்மார்க் என்ற நாட்டை சிறந்த முறையில் பயன்படுத்தி இங்குள்ள கல்வியை சரிவர புரிந்து முன்னேற்றமடையும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை மற்றைய இனங்களை சேர்ந்த மாணவர்களுடன் ஒப்பிட்டால் அதிகமாக இருக்கிறது.
தமிழ் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கல்வியில் மேம்படச் செய்ய எடுத்துவரும் தியாக முயற்சிகளின் பெறுபேறாகவே இந்த வெற்றிகள் அமைந்துள்ளன.
இப்பெண்மணி வல்வை மாதாவுக்கு தனது வெற்றியால் பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.