குரும்பைகட்டி உதயசூரியன் விளையாட்டு கழகத்தின் கிறிக்கற் தொடரில் வெற்றிக்கிண்ணத்தைக் கைப்பற்றி தொடர்ந்து மூன்றாவது தடவையாக கிண்ணத்தத்கைப்பற்றி கற்றிக் சாதனைபடைத்துள்ளது கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டு கழகம்.
பருத்தித்துறை குரும்பைகட்டி உதயசூரியன் விளையாட்டுக்கழகம் நடத்திய அணிக்கு10 பந்துப்பரிமாற்றங்கள் கொண்ட கிறிக்கற்ச்சுற்றுப்போட்டியின் இறுதியாட்டங்கள் நேற்று முன்தினம் மாலிசந்தி மைக்கல் விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றதன.
இப்போட்டியின் இறுதியாட்டத்தில் வல்வை விளையாட்டு கழகத்தை எதிர்த்து கரவெட்டி ஞானம் விளையாட்டு கழகம் மோதிக் கொண்டது.நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடக்க ளமிறங்கிய வல்வை அணி 10 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 8 இலக்குகளை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.அவ்வணிசார்பாக கபிலன் 30 ஓட்டங்களையும் ரதிசா 12 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து விச்சில் சேந்திரன் 3 இலக்குகளையும் ஜெனி குணாதீபன் மற்றும் ரஜீவன் ஆகியோர் தலா ஒரு இலக்கையும் கைப்பறிறனர்.
தொடர்ந்து 80 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஞானம்ஸ் அணி ஜீவனின் அதிரடியான துடுப்பாட்டத்தின் உதவியுடன் 6.3 பந்துப்பரிமாற்றங்களில் 2 இலக்கினை மட்டும் இழந்து 81 ஓட்டங்களைப்பெற்று 8 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது தடவையாகவும் சம்பின்கிண்ணத்தை தமதாக்கியது.
அவ்வணழசார்பாக அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஜீவன் ஆட்க்காமல் 42 ஓட்டங்களையும்ரஜீவன் 19 ஓட்டங்களையும் சுகந்தன் 15 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.பந்து வீச்சில் உலகராச மற்றும் கரி ஆகியோர் தலா ஒரு இலக்கினைக்கைப்பற்றினர்.இப்போடடியின் அட்ட நாயகனாக ஞானம்ஸ் அணியின் ஜீவன் தெரிவுசெய்யப்ட்டார் .வெற்றி பெற்ற விரர்களுக்கான கிண்ணங்களையும் பதக்கங்களையும் வடமாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் வழங்கினார்.