வரலாற்றுச் சிறப்பு மிக்க செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15 தினங்கள் இடம்பெறவுள்ளன.
இதில் பபூங்காவனத்திருவிழா எதிர்வரும் 10 திகதி காலை 7.30 மணிக்கும் கைலாச வாகனத் திருவிழா 11 ஆம் திகதி காலை 7.30 மணிக்கும் சப்பறத்திருவிழா 14 ஆம் திகதி மாலை 6 மணிக்கும் தேர்த்திருவிழா 15 ஆம் திகதி காலை 7 மணிக்கும் தீர்த்தத்திருவிழா மறுநாள் காலை 8 மணிக்கும் மௌனத் திருவிழா அன்று மாலை 5 மணிக்கும் இடம்பெறவுள்ளன.இதேவேளை உற்சவ காலங்களில் காலைத்திருவிழா காலை 7.30 மணிக்கு இரவுத்திருவிழா மாலை 6 மணிக்கும் இடம்பெறும எனவும் இக்காலப்பகுதிகளில் அன்னதானம் அபிசேகம் திருமணசமபந்தமான காரியங்கள் மேற்கொள்ளவுள்ளோர் களஞ்சிய அறையில் தொடர்வு கொண்டு தமது நேர்த;திகளை நிறைவேற்றிக் கொள்ளுமாறும் ஆலய உரிமையாளர் தங்கராசா ஜயர் அகிலேந்திரா ஜயர் அறிவித்துள்ளார்.
இதேவேளை ஆலயத்திற்கு வருகை தருகின்ற பக்தர்கள் தமிழர் பண்பாட்டுக்கு ஏற்ற ஆடை அணிகலன்களை அணிந்து வருமாறும் தேவையற்ற விதமாக தங்க ஆபரணங்கள் அணிந்து வருவதனைத் தவிர்க்குமாறும் ஆலய உரிமையாளர்கள் அறிவித்துள்ளதுடன் ஆலயத்தில் இடம்பெறக்கூடிய திருட்டுமுயற்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுயள்ளதாகவும் அறிவித்துள்ளனர்