கப்பல் கிழவன் முன்றலில் 40 வருடங்களின் பின் மாமிசப்படையல்

0
2,122 views

07-08-2016 காவற்காரன் கடவுளுக்கான மாமிசப்படையல் சுமார் 40 வருடங்களின் பின்னர் நடைபெற்றது. படையலில் மரக்கறிகளுடன் மீன் கறி , இறைச்சிக்கறி , கணவாய்க்கறி முழு மீன் (சுட்டு வைக்கப்பட்டது) , கருவாடு , அவித்த முட்டைகள் , புட்டு சாதத்துடன் கள்ளு, சாராயம் ஆகியனவும் காவற்காரன் கடவுளுக்காக கப்பல் கிழவன் கோயில் வடக்குக் கடற்கரைப் பகுதியில் படைக்கப்பட்டு பூசைகள் இடம்பெற்றது. புடையலில் ஒரு பகுதி கடலில் கொண்டு சென்று விடப்பட்டது ( முன்பு இதற்கென்று சிறு கட்டுமரம் செய்யப்பட்டு கட்டுமரத்தில் படையல் வைக்கப்பட்டு கடலில் கொண்டு சென்று விடப்படும்).
வல்வையில் காவல்க்காரன் கடவுளுக்கு மச்சப்படையல் சம்பந்தமான வரலாற்றுக் கட்டுரை முகநூலில் இருந்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஓடாவி கந்தசாமிஎன்பவரால் இறுதியாக இத்தகைய வழிபாடு கப்பற் கிழவன்கோவில் முன்றலில் கைக்கொள்ளப்பட்டு வந்துள்ளது. எனினும் போர்க் காலச் சூழ்நிலையால் நாற்பது வருடங்களிற்கு மேலாக இவ்வழிபாடு முற்றுமுழுதாக கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் 07.08.2016 அன்று கப்பல்கிழவனுக்கான வழி வெட்டும்படையலான மாமிசப்படையல் குறிப்பிட்ட கோவிலில் மீளவும் கொண்டாடப் பட்டுள்ளது. வல்வெட்டித்துறையின் புரதானநடைமுறையை மீளவும் எடுத்தியம்பிய இந்நிகழ்வினை முன்னிட்டுவல்வெட்டித்துறையின் வழிபாடும் வரலாறும்நூலி லிருந்து இக்கட்டுரை இங்கே எடுத்தாளப்பட்டுள்ளது.

கட்டுரை புகைப்படங்களை தொடர்ந்து.

வல்வை(வல்வாய்)க் கடலோடிகளின் முதற்தெய்வம்கப்பற்கிழவனும் காவல்காரனும் ஒன்றே!….


மாயோன் மேய காடுறை உலகமும் 
சேயோன் மேய மைவரை உலகமும் 
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும் 
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே
(
தொல்காப்பியம்)

இங்குமேய எனப்படுவது வணங்க எனும்பொருளில் குறிக்கப்பட்டுள்ளது. அவ் வகையில் பெருமணல்கள் சூழ்ந்த கடற்கரைப்பகுதிகளில் வணங்கப்படும் தெய் வமாக வருணபகவானே குறிப்பிடப்படுகின்றது. மேலும் இதற்கு உரையெழுதியநச்சினார்க்கினியார்கருங்கடற்கடவுள் காதலித்த நெடுங்கோட்;டெக்கர் என பொ ருள் கூறினார் கருங்கடற்கடவுள் என்பது வருணபகவானைக் குறிக்கும். மேற்கூறப் படும் இவ்வுரையானதுபெருமணல்கள் குவிந்திருக்கும் நெய்தல்நிலமான கடற் கரைப்பகுதியில் வணங்கப்படும் தெய்வம் வருணபகவான்எனவே பொருள்தரு கின்றது. தொல்காப்பியத்துக்கு பின்வந்த எந்தநூல்களிலும் கடற்தெய்வமாக வருணன் என்னும் பெயர் குறிப்பிடப்படாத போதும் காஞ்சிப்புராணம் உட்பட வேறுபல புராணங்களில் மழைத்தெய்வமாக வருணன் உவமிக்கப்படுவதை நாம் காண்கின்றோம். கடலில் உள்ள நீர் ஆவியாகி மழை மேகமாகின்றது. மேகம் குளிர்ந்து மழையாகி மீண்டும் கடலில் பொழிகின்றது. நதிகளிலும் நிலத்திலும் பொழியப்படும் மழைநீரும் இறுதியில் கடலையே அடைகின்றது. இவ்வகையில் மழைத்தெய்வமும் கடல்தெய்வமும் ஒன்றே ஆகின்றது. இந்துக்களினால் வருணன் மழைத்தெய்வமாக வணங்கப்படும் பொழுது பௌத்தமத நூலான மஹாவம்சம் பஜ்ஜன்(pயததரnயெ) என்பவரை மழைத்தெய்வமாக குறிப்பிடுகின்றது.

ஆரியப்பண்பாட்டின் முன் இயற்கையை இறைவனாக வழிபட்ட மக்களின் வழிபாடும் தெய்வஆடலும் இரண்டறக்கலந்த ஒன்று. வெற்றித்திருமகளாம்கொற் றவைஎன்னும் பெண்தெய்வத்தை வழிபடும்போது நடக்கும் ஆடலினை சிலப்பதி காரம்வேட்டுவவரிபின்வருமாறு விளக்குகின்றது. சாலினி என அழைக்கப்படும் பெண்பூசாரி கையில் வில்லேந்திய மறவர் குடியில் பிறந்து வளர்ந்தவள.; அவள்தன் ஊர்நடுவே உள்ள கொற்றவையின் கோவிலின் முன்னே தெய்வம் ஏறப்பெற்று (உருவந்தவளாய்) தன்னிலை மறந்து கைகளைக் கால்;களை அப்படியும் இப்படியும் அசைத்து ஆடியபடியே கண்ணகிக்கு குறி சொல்லுவாள்.

இதுபோன்றதே முருகன் என்னும் வேலன் பற்றிய வழிபாடும் ஆகும். இங்கு குறிப்பிடும் தெய்வஆடல் என்பதுவேலன்வெறியாடல்எனப்படுகிறது இதனை மதுரைக்காஞ்சியின் 611-619ம் அடிகள் பின்வருமாறு விளக்குகின்றது.

அருங்கடி வேலன் முருகொடு வளைஇ 
அரிக்கூ டின்னியங் கறங்கநேர் நிறுத்துக்
கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின்
சீர்மிகுநெடுவேட் பெணித் தழுஉப்பிணையுh
மன்றுதொறு நின்ற குரவை சேரிதேறும்
உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ
வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கிப்
பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாட்
சேரிவிழவின் ஆர்ப்பெழுந் தாங்கு

வேலன்வெறியாடத் தொடங்கினான். இசைகருவிகள் பலவும் ஒன்றுகலந்து இசை யைப் பொழிந்தன. கார்காலத்தில் மலரும் குறிஞ்சிமலரை அவர்கள் அணிந்து கொண்டனர். கடம்பமலர் மாலை அணி;ந்த முருகனின் கைவேலை தமது நெஞ்சில் பொருத்திக்கொண்டனர். அவ்வாறே ஊரின் மன்றுதேறும் ஆடினர். ஊர்தேறும் அவன் பெருமையை பாட்டாகப் பாடினர். இவ்வாறே பல்வேறுவகையாக ஆடினர்.

இவைபோலவே நெய்தல் நிலமான கடற்கரையோர மக்களும் தமது தெய்வமான வருணபகவானை ஆடல்பாடலுடன் தொழுது வணங்கினர். அவ்வேளையில் குறிப்பாக பெரியசுறா எலும்புகளை நிலத்தில் நட்டும் பனங்கள்ளைக் குடித்தும் ஆணும் பெண்ணும் தமக்கு பிடித்தவர்களுக்கு தாழை(கற்றாழை)மலரின் மாலையைச் சூடி யும் கடலுக்குபோகாத முழுமதிநாளான பௌர்ணமிநாளில் தமதுபொழுதைக் கழிப்பர். எனக்கூறும் நச்சினார்க்கினியார் முதல் பின்வந்த தமிழ்அறிஞர்களான பி.டி. சீனிவாசஐயங்கார் எனப்பலரும் வருணவழிபாட்டின் எச்சமாக குறிப்பிடும் பட்டினப் பாலையின் 81-92ம் அடிகள் பின்வருமாறு

நிலவு அடைத்த இருள்போல
வலை உணங்கும் மணல் முன்றில்
வீழ்தாழைத் தாள் தாழ்ந்த
வெண் கூதாளத்துத் தண்பூங்கோதையர்
சினைச்சுறாவின் கோடு நட்டு 
மனைச்சேர்த்திய வல் அனங்கினான்
மடல்தாழை மலர்மலைந்தும்
பிணர்பெண்ணைப் பிழி மாந்தியும்
புன்தலை இரும்பரதவர் 
பைந்தழை மா மகளிரோடு 
பாயிரும் பனிக்கடல் வே(h)ட்டம் செல்லாது

1800 வருடங்களிற்கு முன்னர் கரிகாலன்காலத்தில் கடற்தெய்வமாம் வருணபகவானை காவிரிப்பூம்பட்டினத்து மக்கள் வழிபட்டதனை நினைவுகூருவன மேற்படிஇவ்வரிகள். இப்பட்டினப்பாலை வரிகள் உரைப்பது போன்ற இயற்கை வழி பாடானது வல்வெட்டித்துறையில் இருபதாம் நுற்றாண்டின் நடுப்பகுதிவரை கப்பல் க்கிழவன் கோவிலின் முன்றலின் கைக்கொள்ளபட்டு வந்துள்ளது. இவ்வாறு கடல் தெய்வமான வருணவழிபாட்டு முறையானது இன்று பெருமளவு மறைந்துள்ளது. எனினும் வல்வெட்டித்துறை மக்களின் ஆரம்ப காலவழிபாடானது இவ்வகை யானதேயாகும். இதன்எச்சமாக இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன்பும் மீன், கூழ், கள்; என்பனவற்றை படைத்து ஆடல்பாடலுடன் மக்கள் வழிபட்டதெய்வம் தான்கப்பற்கிழவன்;’ என அழைக்கப்படும் தெய்வமாகும். அக்காலத்தில் காவிரிப்பூம் பட்டினத்துடன் கடற்தொடர்புகளை வைத்திருந்த வல்வெட்டித்துறைப் பட்டினத்தின் மறுபெயரானவல்வைபற்றிய குறிப்பினையும் இப்பட்டினப்பாலையே நமக்குத் தருகின்றது. வௌ;வேறுஇடங்களில் இருந்துவந்த படகுகள் காவிரிப்பூம்பட்டினத்து கடற்கரையில் கட்டப்பட்டிருந்த காட்சியை விளக்கும் அதன் 29-32வது அடிகளில் பின்வருமாறு

வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி
நெல்லோடு வந்த வல்வாய் பஃறி
பணைநிலைப் புரவியின் அணை முதல்
பிணிக்கும் கழிசூழ் படப்பை

எனக்கூறும் ஆசிரியர் வல்வெட்டித்துறையின் மறுபெயரான வல்வை(வல்வாய்)இல் இருந்து காவிரிப்பூம்பட்டினத்திற்கு சென்றிருந்த படகுகளைநெல்லோடு வந்த வல்வாய் பஃறிஎனக்குறிப்பிட்டு கூறுகின்றார். இவ்வாறு கூறிய உருத்திரங்கண் ணணார் தொடர்ந்துவரும் பட்டினப்பாலையின் 190—191வது அடிகளில்

கங்கை வாரியும் காவரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்

என மீண்டும் ஈழத்தின் வல்வை(வாய்)த் துறைமுகத்தில் இருந்து வந்த உணவுப்பொருட்களை நெல்லென அடையாளம் காட்டியுள்ளார். காவிரிப்பூம்பட்டினம் பலநூற்றாண்டுகளிற்கு முன்பே கடலில் மூழ்கிவிட்டது. அதனுடன் கடற்தொடர்பு களை கொண்டிருந்த வல்வாய் எனும் வல்வெட்டித்துறை பட்டினமானது கடலோடி களின் பெருமைக்குரியபட்டினமாகவே இன்றுவரை திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இருபதாம் நூற்றாண்டின இறுதிவரை இத்தகைய இயற்கைவழிபாடு வல்வெட்டித்துறைக் கடற்கரையில் நின்று நிலைத்துள்ளமை ஆச்சரியமல்ல. இவ் வகைவழிபாடு இம்மண்ணின் தொன்மைக்கும் இன்றும் கடலைத்தமது தெய்வமாக வணங்கும் இம்மண்ணின் மைந்தர்;களது பெருநம்பிக்கைக்கும் சான்றாகும். கடல் தாண்டி கப்பலில் செல்வோரும் கடல்மீது மீன்பிடிக்கச் செல்வோரும் தமக்குத் துணையாக தாம்வணங்கும் கடவுளையே எப்போதும் நினைத்துக்கொள்வர். பொது வாகவே மழையும் புயலும் சேர்ந்தடிக்கும் காலங்களில் கடல்பொங்கி ஆகாயத்தில் நட்சத்திரங்களும் மறைந்துவிடும் அலைகளினால் கப்பல்களும் படகுகளும் பந் தாடப்படும்பொழுது கடலோடிகளின் துணையாக வருணபகவானே எப்போதும் முன் னிற்பார் என்பது ஐதீகம். இக்காலத்தைப் போல வானொலித்தொடர்பாடல் எதுவு மி ன்றி கருமையான கடலிலே தனிமையாக நிற்கும் படகானது காற்றின் போக்கிற்கும் அலையின் வீச்சிற்;குள்ளும் சிக்கிச்சுழலும் போது இடிஇடிக்கும் அவ்வேளையில் உடலின் இயக்கமே நின்றுவிடும் அக்காலத்தில் மழைத்தெய்வமான வருணபகவா னையும் அவர் மகனான அருச்சுனனையும் கடலோடிகள் கூவிஅழைப்பர்

இன்றும்கூட இடிஇடிக்கும் போதுவருணபகவானுக்கு அரோகராஅருச்சுன ருக்குஅரோகரா…….. எனக்குரலெடுக்கும் வயோதிபத்தாய்மாரையும் முதியோர் களையும் எமது வாழ்நாளில் எமதுமண்ணில் நாம் கண்டு வந்திருகின்றோம்

கடல்மீது கலங்கிநின்று மனம்பயந்து வருணபகவானை நினைத்து அவருக்கு நேர்த்திவைத்து தப்பிப்பிழைத்து ஊருக்கு திரும்பும் மக்கள் தம்மைக் காப்பாற்றிய அக்கடற்தெய்வத்திற்;கு நன்றிக்கடனாக தமது நேர்த்தியை நிறை வேற்றுவர். தம்மைக்காத்ததனால் வருணபகவானை தமது காவல்காரனாக மனதில் நினைத்து அவரைவணங்கினர். அவ்வாறேகள்ளை அருந்திய பின்ஏற்படும் மயக் கத்தில்‘(பிணர்பெண்ணைப் பிழிமாந்தி😉 வருணபகவானை தமக்கு உடையவனாக தம்மில் ஒருவராக தமது காவற்தெய்வமாக அவரைப்போற்றி வணங்கினர். அக் கடலோடிகளின் அவ்வகையான வணக்கத்தினால்வருணபகவான‘; என்னும் பெயர் மறைந்துகாவற்காரன்;’ என்னும் பெயர் பின்னாட்களில் நின்று நிலைத்துவிட்டது. எமதுமண்ணில் பொதுவாகவே மீனவரும் கப்பல்வணிகர்களும் கடல்மீது பயணிப் பதால் தமக்குத் துணையான தமது காவற்தெய்வமான வருணபகவானை எப்பொழு தும் நினைத்து தமது முன்னோர்களினால் ஸ்தாபிக்கப்பட்ட குறிக்கப்பட்ட உருவை வழிபட்டு இருப்பர். அவ்வுருவமே பின்நாட்களில் கடலோடிகளினால் காவற்காரன் என்றும் கப்பலில் செல்பவர்கள் வழிபடும் தெய்வம் என்பதால்கப்பற்கிழவன்;’ என்ற பெயருடனும் எமதுமண்ணில் நின்று நிலைத்துவிட்டது.

புலால்உண்பதும் கள்அருந்துவதும் எனத்தாம் உண்பதனையே ஆண்டவ னுக்கும் படைப்பதே முன்னிருந்N;தாரின் இயற்கைவழிபாடாகும். புலாலும் கள்ளும் மாமிசமும் தவிர்க்கப்பட வேண்டும் என்பது பின்வந்த சைவஆகமவிதியாகும்;;;. இவ் வகையில் கோவிலின் மூலஸ்தானத்தில் முதன்மைத்தெய்வமாக இருந்தகப்பற் கிழவன்;’ காவல்காரனாக கோவிலின் வாசலுக்கு படிஇறங்கியதும் இன்று புலால் தெய்வம் என்ற பெயரில் கோவிலின் வடகிழக்கு மூலையில் ஒதுக்கப்பட்டுள்ளதும் ஆகமவழிபாட்டின் ஆக்கிரமிப்பே அன்றி வேறில்லை. கப்பற்கிழவன்; என்பதும் காவற் காரன் என்பதும் ஒரேதெய்வமான போதிலும் இன்றுபலரும்கப்பற்கிழவன்;’ என்பது அங்கிருக்கும் விநாயகர் என எண்ணிவழிபடுவது மேலும் விந்தையானது. இவ் வகையிலேயே வல்வெட்டித்துறைக் கடலோடிகளின் முதல்தெய்வமான வருண பக வானான கப்பற்கிழவனுடன் பின்வந்தபிள்ளையாரும் இணைந்துகப்பலுடைய பிள் ளையார்கோவில் என இக்கோவில பின்வந்தகாலங்களில்; பெயர் பெறுவதாயிற்று தாயிற்று.


கடல்வணிகர்களின் பிறப்பிடமாகவும் உறைவிடமாகவும் பல்லாண்டு காலமாக விளங்கிய வல்வெட்டித்துறையில் இருந்து புறப்படும் கப்பல்கள் யாவும் இக் கோவிலை அண்டிய கடற்பகுதியில் இருந்தே தமது கடற்பயணங்களை ஆரம் பித்தன. வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையுடன் இணைந்து இன்று காணப்படும் இக்கோவில் அமைந்திருக்கும் நிலப்பகுதி ஆனைவிழுந்தான் என தோம்பு எனப்படும் காணிஉறுதிகளில் குறிப்பிடப்படுகின்றது. இக்கோவிலின் முன் னிருந்த பகுதியே பெரியகல்லடி என முன்பு அழைக்கப்பட்டுவந்துள்ளது. ஒல்லாந்தர் காலம்வரை வல்வெட்டித்துறையில் இருந்து யானைகள் ஏற்றுமதி செய்யப்பட்டதனை அடையாளப்படுத்தும் இவ்விடத்திலேயே தமிழரின் தொன்மைக்கு சான்றுபகரும் கப்பற்கிழவன் கோவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்விடத்தில் இருந்து தமது கடற்பயணங்களை ஆரம்பிக்கும் கப்பலோட்டிகள் தமது காவற்காரனாம் கப்பலுடையவரை வணங்கிவிட்டே தமதுபயணத்தைத் எப்போதும் தொடருவர். இக்காலங்களில் பாய்களை விரித்து நங்கூரத்தை இழுக்கும்போது ஏற்படும் தம் உடல் அசதியை மறக்க அனைவரும் தமக்கு நம்பிக்கை உள்ள கடவுளர்களை துணைக்கழைத்து கோரசாக பாடுவர். இப்பாடல்கள்ஏலோலப்பாடலகள்‘;எனவும்அம்பாப்பாடல்கள‘; எனவும் இடத்திற்கிடம் வௌ;வேறு பெயர்களில் அழைக் கப்படும்.

இத்தகையபாடல்களுடன் தமது கடற்ப்பயணங்களினை ஆரம்பிக்கும் வல்வெட்டித் துறைக் கடலோடிகளினால் பாடப்பட்ட பாடல்கள் பலவும் பா.மீனாட்சிசுந்தரம் எழு தியவரலாற்றில் வல்வெட்டித்துறைஎன்னும் நூலில் காணப்படுகின்றன. தனித் தனியாக பலதெய்வங்களின் பெயர்களும் அப்பாடல்களில் இழையோடிக் காணப் படுகின்றன. உதாரணமாக அந்நூலின் 148ம்பக்கத்தில் காணப்படும் பாடலின் சில அடிகள் பின்வருமாறு

பிள்ளையார் காவலிலே வேதனைகள் வாராமல்
அம்மனுடைய காவலிலே ஆபத்து வாராமல்
சிவனுடைய காவலிலே சீரழிவு வாராமல்
முருகையா காவலிலே மோசமேதும் வாராமல்
வாராமல் காத்தருளும் வல்லிபுரஆண்டவனே
கப்பலுடையவரே கண்கலக்கம் தீர்த்தவரே
எப்பொழுதும் உமைமறவோம் எங்களை நீ கரைசேரும்!……..
இப்பாடல் பிள்ளையார் எனும் விநாயகர் அம்மன் என அழைக்கப்படும் முத்துமாரி அம்மன் சிவபிரான் மற்றும் முருகன் என்பவர்கள் தம்முடன் இருப்பதை கூறுகின்றது. எனினும் கடலில்செல்லும் தமக்கு எவ்விததீங்கும் நேராமல் தம்மைக் காக்கும்படி காத்தற்கடவுளான வல்லிபுரஆண்டவனை வேண்டும் இவர்கள் இறுதியில் கப்பலு டையவரே கண்கலக்கம் தீர்த்தவரே……எங்களை நீ கரைசேரும் எனப்பாடுகின்றார் கள். மேற்கூறிய இவ்வடிகள் மூலம் பிள்ளையார் எனும்தெய்வம் வேறுஎன்பதுடன்கப்பலுடையவர்அல்லதுகப்பற்கிழவன்என்னும் தெய்வமானது வேறானது என்பதை தெளிவாக உரைக்கின்றது. என்பதுடன் இறுதியில் தமது நம்பிக் கைக்குரிய கப்பலுடையவரையே அக்கடலோடிகள் தஞ்சமடைந்து அவரையே தம் மைக் கரைசேர்க்கும்படி வேண்டுவதையும் அறியக்கூடியதாக உள்ளது.

ஊதாரணமாக இங்குகுறிப்பிடப்பட்ட இப்பாடல்போன்று வல்வெட்டித்துறையில் வழங்கிய வேறு சிலபாடல்கள் மூலமும் கப்பலுடையவர் வேறு பிள்ளையார் வேறு என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. மேற்கூறிய இத்தகைய ஆதாரங்கள்மூலம் கப்பலுடையவர் என்னும் கப்பற்கிழவனே கடலோர வல்வெட்டித்துறை மக்களின் ஆரம்பகால காவல்தெய்வமும் முதல்த்தெய்வமும் என உறுதிபடத்தெரிகின்றது.

ஆரியப்பண்பாட்டிற்கு முந்தைய எம்மூதாதையரான வல்வெட்டித்துறை கடலோடி களின் முதற்தெய்வமான கப்பல்கிழவன் என்னும் வருணவழிபாடு பின்வந்த காலங் களில் பின்தள்ளப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கடல்தாயான முத்துமாரியம்மன் வழி பாட்டால் பின்தள்ளப்பட்ட இது ஏழாம்நூற்றாண்டிலில் ஏற்பட்ட சைவசமய மறு மலர்சியுடன் கூடிய ஆகமவிதி வழிபாட்டுடன்;வந்த விநாயகர் வழிபாட்டின் எழுச்சி யில் மேலும் பின்தள்ளப்பட்டுவருகின்றது.

புலால் உண்பதும் கள் அருந்துவதும் என தாம் விரும்பிஉண்பதனையே தாம்வணங்கும் ஆண்டவனுக்கும் படைப்பதே முன்னிருந்த இயற்கைவழிபாடாகும். புலாலும்கள்ளும் மாமிசமும் தவிர்க்கப்பட வேண்டும் என்பது பின்வந்த சைவ ஆகமவிதியாகும்;;;. இவ்வகையில் கோவிலின் மூலஸ்தானத்தில் முதன்மைத் தெய் வமாக ஆரம்பத்தில் இருந்தகப்பற்கிழவன்காவல்காரனாக கோவிலின் வாசலுக்குபடி இறங்கியதும் இன்று புலால்தெய்வம் என்ற பெயரில் கோவிலின் வடகிழக்கு மூலையில் ஒதுக்கப்பட்டுள்ளதும் ஆகமவழிபாட்டின் ஆக்கிரமிப்பே அன்றி வேறில்லை. கப்பற்கிழவன் என்பதும் காவல்காரன் என்பதும் ஒரேதெய்வமான போதிலும் முன்கூறியதுபோன்று இன்று பலரும்கப்பற்கிழவன்என அங்கிருக்கும் விநாயகரை வழிபடுவது மேலும் விந்தையானது.

இவ்வாறு ஆரம்பகாலங்களில் கடற்தெய்வமான வருணனை வழிபட்ட கடலோ ரமக்கள் அதனோடிணைந்த கடல்நீரையும் தெய்வமாக வழிபட்டார்கள். கடலையை தாயாக போற்றும் இம்மக்கள் கடல்நீரையும் தமது தெய்வமாக வழிபட்டவர்கள் என்பதை பின்வரும்நற்றிணைஅடிகள்மூலம் நாம் அறியலாம்.
தெண்டிரைப் 
பெருங்கடற்பரப்பில் அமர்ந்துறை யணங்கே 
இருங்கழிமருங்கின் நிலைபெற்றனையே

தெண்டிரைதெளிந்தகடல்அலை 
இருங்கழிஆழந்;தகடல்
அணங்கேபெண்ணே

கடற்;பெண்ணேஆழ்ந்தகடலிலும் நிலைபெற்றனையே

என இதன் கருத்துஅமைகின்றது. கடலைவணங்குவதும் அதற்கு அடையா ளமாக கடல்நீரிற்கு நேர்த்திக்கடன் வைப்பதும்; அதன்காரணமாக அதற்கு படைய லிட்டுவணங்குவது அல்லது பலிகொடுப்பதும் இன்று எங்கும்அருகிவிட்டது. இற்றை க்கு சுமார் நாற்பதுவருடங்களிற்கு முன்பும் கப்பலுடையவர் கோவிலின் முன்றலில் இத்தகைய வழிபாடுநடைபெற்று வந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வல்வெட்டித்துறை கப்பலுடையபிள்ளையார் கோவிலின் வடக்குவாசலை அன்று அலங்கரித்துக்கொண்டிருந்த அரசமரநிழலில் ஆக்கப்படும் பலவித உணவுகளும் அதேவாசலில் கப்பற்கிழவனானவருணனுக்குபடைக்கப்படும். இதனைவழி வெட்டும்படையல்‘; என அழைப்பர். பின்னர் கட்டுமரமாதிரியில் செய்யப்பட்ட சிறிய பாய்மரமொன்றில் அனைத்து உணவுகளும் வைக்கப்படும். இதனைத்தொடர்ந்து படையலுடன்கூடிய அம்மாதிரிப்பாய்மரம் கரையில் இருந்துவட்டிஎனப்படும் கடல் அணைக்கு வெளியில் இழுத்துச்செல்லப்பட்டு ஆழ்கடலிற்குள் விடப்படும். பொதுவா கவே இயற்கை வழிபாடான சங்ககாலவழிபாட்டிலும் சரி அல்லது பின்புவந்த ஆகம வழிபாட்டிலும் சரி தெய்வத்திற்கு படைக்கப்படும் திருவமுதுகள் இறுதியில் பக்தர் களிற்கே உரியனவாகின்றன. ஆனால் இங்கு கடற்தாய்க்கு படைக்கப்படும் அனை த்துஉணவுகள் யாவும் கடலிற்கே உரியனவாகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடலின் சீற்றத்தினால் தமதுதொழிலில் ஏற்படும் பாதிப்பகளை தவிற்பதற்காக கடல்வணிகர்களும் கடல்மீது சென்று மீன்பிடிப்போர் தமதுவலைகளில் மீன்படுவது (மீன்அகப்படுவது) குறையும்போதும்ஓடாவியார்எனப்படும் படகுகளைச் செய் வோர் தமதுபடகுகள் கடல்மீது எவ்விதகுந்தகமும் நேராமல் பயணம் செய்வதற் காகவும் இவ்வாறான நேர்த்திக்கடன்களை கடல்தாய்மீது நிறைவேற்றுவர்.

இருபதாம்நூற்றாண்டின் இறுதிவரை பேணப்பட்டுவந்ந இவ்வகை நடைமுறைகளின் மூலம் கடலோடிகளான வல்வெட்டித்துறை மக்களின் முதல்தெய்வமாக வருண பகவானானகப்பற்கிழவனும்வல்வெட்டித்துறையின் முதற்கோவிலாககப்பற்கிழ வன்கோவிலும் விளங்கியுள்ளதை அறியமுடிகின்றது.

ஓடாவி கந்தசாமிஎன்பவரால் இறுதியாக இத்தகைய வழிபாடு கப்பற் கிழவன்கோவில் முன்றலில் கைக்கொள்ளப்பட்டு வந்துள்ளது. எனினும் போர்க் காலச் சூழ்நிலையால் நாற்பது வருடங்களிற்கு மேலாக இவ்வழிபாடு முற்றுமுழுதாக கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் 07.08.2016 அன்று கப்பல்கிழவனுக்கான வழி வெட்டும்படையலான மாமிசப்படையல் குறிப்பிட்ட கோவிலில் மீளவும் கொண்டாடப் பட்டுள்ளது. வல்வெட்டித்துறையின் புரதானநடைமுறையை மீளவும் எடுத்தியம்பிய இந்நிகழ்வினை முன்னிட்டுவல்வெட்டித்துறையின் வழிபாடும் வரலாறும்நூலி லிருந்து இக்கட்டுரை இங்கே எடுத்தாளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here