யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்களின் கையடக்கத் தொலைபேசிகளிற்கு பல்கலைக் கழக நிர்வாகத்தின் பெயரில் அநாவசிய குறுந்தகவல்கள் அனுப்பப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது,
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற மாணவ குழுக்களிற்கிடையிலான மோதலையடுத்து தற்காலிகமாக மூடப்பட்ட பல்கலைக் கழகம் தற்போது இயல்பிற்கு திரும்பும் நிலையில் இதனை விரும்பாத சிலர் வேண்டுமென்றே மாணவர்களின் கைத் தொலைபேசிகளிற்கு குறுந்தகவல் மூலம் தவறான செய்திகளைப் பரப்புகின்றனர்.
குறித்த தகவலில் பல்கலைக் கழகத்தின் சில பீடங்கள் இயங்கும் கால எல்லை மேலும் சிறிது காலம் பிற்போடப்பட்டுள்ளதாக அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தகவலை அனுப்பும் தொலைபேசி இலக்கங்களிற்கு அழைப்பினை எடுக்க முயன்றால. குறித்த தொலைபேசிகள் இயங்க மறுக்கின்றதாகவும் சுட்டிக்காட்டப்படுவதோடு இவ்வாறான தகவலை சில விசமிகளே திட்டமிட்ட வகையில் பரப்பி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது