மத்திய அரசின் அடிமைகள் அல்ல வடமாகாணசபை

0
224 views

மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக பணியாற்றுவதற்கு வட மாகாண சபையால் முடியாது என மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள உலக வங்கியின் அதிகாரிகளை கைதடியிலுள்ள மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் வைத்து சந்தித்த போது இந்த விடயத்தை எடுத்துக் கூறியதாக அவர் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகவிலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட சி.வி.விக்னேஸ்வரன்இ மத்திய அரசாங்கத்தோடு மாகாண சபையும்இ மாகாண சபையுடன் பிரதேச சபைகளும் ஒன்றிணைந்து எவ்வாறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உலகவங்கி அதிகாரிகள் வருகைதந்ததாக குறிப்பிட்டார்.
மத்திய அரசாங்கம் வட மாகாணசபையை பொருட்படுத்துவது இல்லை என்பதையும் பல விதங்களிலும் அவர்கள் உதாசீனம் செய்து வருகிறார்கள் என்பதையும் உலக வங்கி அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறியதாக வடமாகாண சபை முதலமைச்சர் தெரிவித்தார்.
மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையில் உரிய புரிந்துணர்வும் சேர்ந்து நடக்கின்ற அடிப்படை மனோபவம் இல்லாது இருந்தால் வட மாகாண சபையால் எவ்வாறு இணைந்து வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிகார பரவலாக்கத்தை வட மாகாண சபை எதிர்பார்த்துள்ளதையும் உலக வங்கி அதிகாரிகளிடம் வட மாகாண முதலமைச்சர் எடுத்துக் கூறியுள்ளார்.
இந்தோனேசியாவில் தாம் அனுபவ ரீதியாக கண்டறிந்த விடயங்களை குறிப்பிட்டுஇ உள்ளுராட்சி மன்றங்கள் கூடிய வலுவோடு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அதிகாரப்பரவலாக்கம் முக்கியமானது என்ற கருத்தை அவர்கள் முன்வைத்தார்கள் எனவும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here