வல்வையைச் சேர்ந்த ஆசிரியர் கி.செல்லத்துரை இயக்கிய உயிர்வரை இனித்தாய் திரைப்படம் கடந்த சனிக்கிழமை 16.07.2016 அன்று சுவிற்சலாந்தில் இடம் பெற்ற சாதனைத்தழிழா 2016 என்னும் விருது வழங்கல் விழாவில் ஒன்பது விருதுகளை வென்று சாதனை படைத்தது.
திரைப்படத்தின் இயக்குநர் கி.செல்லத்துரை சிறந்த திரைப்பட இயக்குநராக தேர்வு செய்யப்பட்டார்.. அத்தோடு உயிர்வரை இனித்தாய் திரைப்படத்திற்கு ஒன்பது விருதுகள் கிடைத்தன.
வல்வை கலைஞர் ஒருவர் சிறந்த திரைப்பட இயக்குநராக வெற்றி பெற்றிருப்பது முக்கியமான விடயமாகும்.
மேலும் இசையமைப்பாளராகவும், பின்னணிப்பாடலிலும், படத்தொகுப்பிலும் புலம் பெயர்ந்து டென்மார்க்கில் வாழும் வல்வை கலைஞர்கள் பெற்றுள்ள வெற்றி ஒரு மகத்தான நிகழ்வாகும்.
புலம் பெயர்ந்த வல்வை கலைஞர்களான வஸந்த் செல்லத்துரை சிறந்த இசையமைப்பாளராகவும், சிறந்த பாடகியாக அர்ச்சனா செல்லத்துரையும் விருதுகளை வென்றனர்.
உயிர்வரை இனித்தாய் திரைப்படம் வென்ற ஒன்பது விருதுகளின் விபரம் வருமாறு :
01. சிறந்த திரைப்படம் : உயிர்வரை இனித்தாய்
02. சிறந்த இயக்குநர் : கி.செ.துரை
03. சிறந்த இசையமைப்பாளர் : வஸந்த் செல்லத்துரை
04. சிறந்த பின்னணிப்பாடகி : அர்ச்சனா செல்லத்துரை
05. சிறந்த எடிட்டர் : வஸந்த் செல்லத்துரை
06. சிறந்த நடிகை : நர்வினி டேரி
07. சிறந்த கமேராமேன் : டெசூபன்
08. சிறந்த பாடல் ஆசிரியர் : சதாபிரணவன்
09. சிறந்த ஆடை வடிமைப்பாளர் : அஞ்சலி வசீகரன்
ஆகிய ஒன்பது பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது, ஏற்கெனவே இத்திரைப்படம் நோர்வே திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை ஆகிய இரு விருதுகளை வென்றுள்ளது, இதுவரை மொத்தம் 11 விருதுகளை வென்றுள்ளது.
இத்திரைப்படம் அடுத்த மாதம் கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் வெளியாவதற்கான ஏற்பாடுகள் நிறைவு கட்டத்தில் உள்ளன..
யாழ்ப்பாணத்தில் காண்பிக்கப்படும்போது வல்வை மக்கள் பார்ப்பதற்கான விசேட ஏற்பாடுகளை செய்ய விரும்புவதாக திரைப்பட இயக்குநர் தெரிவிக்கிறார்.
பரிசளிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் :